Thirupugazh Song: திருப்புகழ் பாடல் 268 கொந்துவார் குரவடி (திருக்கணிகை)
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முருகனை புகழ்ந்து பாடும் இறை நூலாகும். திருப்புகளின் இந்த பாடலில் தலைவன் தலைவியை பற்றி வர்ணித்து எழுதும் பாடலாக அமைந்துள்ளது. குராமரத்தின் அடியில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் தனது தலைவியான அழகின் உருவமாக உள்ள செம்பொன் சிலம்பை அணிந்த வள்ளியை பற்றி வர்ணித்து மடல் எழுதி அவரை மனம் முடிந்த கதையை பற்றி இப்பாடல் கூறுகிறது.
திருப்புகழ் பாடல் 268
கொந்து வார்குர வடியினு மடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
கொண்ட வேதநன் முடியினு மருவிய …… குருநாதா
கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வருசம …… யவிரோத
தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
சந்தி யாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து …… விரைநீபச்
சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
கிண்கி ணீமுக விதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு …… மறவேனே
சிந்து வாரமு மிதழியு மிளநவ
சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
செஞ்ச டாதரர் திருமக வெனவரு …… முருகோனே
செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி …… புதுவேயும்
இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு …… மபிராம
இந்த்ர கோபமு மரகத வடிவமு
மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய …… பெருமாளே.
பாடல் விளக்கம்
பூங்கொத்துக்களால் நிறைந்த குராமரத்து அடியிலும்,அடியார்களின் இதயத் தாமரையின் நடுவிலும்,பல நெறிகளைக் கொண்ட வேதத்தின் நல்ல முடிவிலும்,விளங்குகின்ற குருநாதனே, கொங்கு நாட்டில் அழகு நிறைந்த பழனியில் ஆறுமுகனாக எழுந்தருளியவனே, திருச்செந்தூரில் காவற்காரனாக விளங்குபவனே, திருத்தணிகையில் இணையில்லாதவனாக விளங்குபவனே,
கூட்டமாக இரைச்சலுடன் தர்க்கித்து வருகின்ற,அநேக யுக்திகளைக்கொண்டு
கொண்டு விரோதிக்கின்ற, சமயவாதிகளால் பெறுவதற்கு அரிதானதும்,அன்னியர்களால் சந்திக்க முடியாததும்,தனக்கே உரிய ஓர் ஒப்பற்ற
பரம்பரையாக வருவதும் இதுவே என்று எனக்கு உபதேசித்து, வாசனை பொருந்திய கடம்ப மாலை அணிந்ததும்,வண்டினம் ஒலிப்பதும், பொன்னால் ஆன சிறுசலங்கைகளைத்
தரித்ததுமான,சுகம் தரும் இரு திருவடித் தாமரைகளைத் தந்த பெரிய கிருபையை
கனவிலும் நனவிலும் மறவேன்.கங்கை ,நதியையும், ஆத்திமலரையும்,
கொன்றையையும், இளமையும் புதுமையும் உடைய பிறைச்சந்திரனையும்,பாம்பையும் சிவந்த சடையுடைய சிவபெருமானது அழகிய குழந்தையாக அவதரித்த முருகனே,
செண்பகமரங்கள் நிறை வனத்திலும், பரண்மீதும், உயரமான சந்தன மரக்
காட்டிலும் வாசம் செய்த குறமகள் வள்ளியின் செம்பொன் சிலம்பை அணிந்த தாமரை போன்ற பாதங்களையும், வளையல் அணிந்தஇளம் மூங்கில் போன்ற கரங்களையும்,சந்திரனை ஒத்த ஒளிமிக்க முகத்
தாமரையையும்,கஸ்தூரியும் குங்குமமும் தரித்த
மார்பையும், இனிமையான யாழ் போன்றதும் அமிர்தம் போன்றதுமான வசனத்தையும்,
இளநகையையும்,வசீகரிக்கும் சிவப்பான அதரங்களையும்,மரகதப் பச்சை வடிவத்தையும், வானவில் போன்ற புருவங்களையும், இரு
குண்டலங்களோடு போர்புரிவது போல காதுவரை நீண்ட கண்களின்
நீலமணிகளையும் மடல் ஏட்டில் எழுதி
வர்ணித்த பெருமாளே.