ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் சுவாமிமலை 212 காமியத் தழுந்தி

திருப்புகழ் சுவாமிமலை பாடல் 212 இல் காமியத் தழுந்தி பாடலில் இறை சரணாகதி விளக்கப்பட்டுள்ளது. ஆசை விடுத்து, யமனை கையில் போகாமல், ஓம் என்ற பிரணவத்தை நோக்கி போதல் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

காமியத் தழுந்தி …… யிளையாதே
     காலர்கைப் படிந்து …… மடியாதே

ஓமெழுத் திலன்பு …… மிகவூறி
     ஓவியத் திலந்த …… மருள்வாயே

தூமமெய்க் கணிந்த …… சுகலீலா
     சூரனைக் கடிந்த …… கதிர்வேலா

ஏமவெற் புயர்ந்த …… மயில்வீரா
     ஏரகத் தமர்ந்த …… பெருமாளே.

. விளக்கம்

காமியத் தழுந்தி … ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு

யிளையாதே … மெலிந்து போகாமல்,

காலர்கைப் படிந்து … யம தூதர்களின் கைகளிற் சிக்கி

மடியாதே … இறந்து போகாமல்,

ஓமெழுத்தி லன்பு … ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு

மிகவூறி … மிகவும் ஏற்பட்டு,

ஓவியத்தி லந்தம் … யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை
(அடைய)

அருள்வாயே … அருள்வாயாக.

தூமமெய்க் கணிந்த … வாசனைப் புகையை மேனியில் அணிந்துள்ள

சுகலீலா … சுகமான லீலைகளைப் புரியும் பெருமானே,

சூரனைக் கடிந்த கதிர்வேலா … சூர சம்ஹாரம் செய்த ஒளி வேலனே,

ஏமவெற் புயர்ந்த மயில்வீரா … பொன்மலையைப் போலச் சிறந்த
மயிலில் ஏறும் வீரனே,

ஏரகத் தமர்ந்த பெருமாளே. … திருவேரகம் என்ற சுவாமிமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.

மேலும் படிக்க : திருப்புகழ் 173 பகர்தற்கு அரிதான (பழநி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *