திருப்புகழ் சுவாமிமலை பாடல் 211 கறை படும் உடம்பு
திருப்புகழ் சுவாமிமலை பாடலான 211 இல் கறைபடும் உடம்பு என்ற பாடல் அமைந்துள்ளது. அழியும் உடலை நாம் எவ்வாறு யோகத்தில் செலுத்தி மூலாக்கினியை வலுபடுத்துதல் விளக்கப்பட்டுள்ளது. தேவர்கள் முதல் திருமாள் வரை விளக்கப்பட்டு முருகரை சரணா
| கறைபடுமு டம்பி ராதெனக் கருதுதலொ ழிந்து வாயுவைக் கருமவச னங்க ளால்மறித் …… தனலூதிக் கவலைபடு கின்ற யோககற் பனைமருவு சிந்தை போய்விடக் கலகமிடு மஞ்சும் வேரறச் …… செயல்மாளக் குறைவறநி றைந்த மோனநிர்க் குணமதுபொ ருந்தி வீடுறக் குருமலைவி ளங்கு ஞானசற் …… குருநாதா குமரசர ணென்று கூதளப் புதுமலர்சொ ரிந்து கோமளப் பதயுகள புண்ட ரீகமுற் …… றுணர்வேனோ சிறைதளைவி ளங்கு பேர்முடிப் புயலுடன டங்க வேபிழைத் திமையவர்கள் தங்க ளூர்புகச் …… சமராடித் திமிரமிகு சிந்து வாய்விடச் சிகரிகளும் வெந்து நீறெழத் திகிரிகொள நந்த சூடிகைத் …… திருமாலும் பிறைமவுலி மைந்த கோவெனப் பிரமனைமு னிந்து காவலிட் டொருநொடியில் மண்டு சூரனைப் …… பொருதேறிப் பெருகுமத கும்ப லாளிதக் கரியெனப்ர சண்ட வாரணப் பிடிதனைம ணந்த சேவகப் …… பெருமாளே. விளக்கம் கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து … குற்றங்களுக்கு இடமான உடல் நிலைத்து நிற்காது என்று எண்ணுதலை விட்டு, வாயுவை கரும வசனங்களால் மறித்து … (அவ்வுடல் நிலைத்து நிற்கச் செய்ய விரும்பி) உள் இழுக்கும் வாயுவை தொழில்* மந்திரங்களால் தடுத்து நிறுத்தி, அனல் ஊதி … மூலாக்கினியை எழுப்பி, கவலைப் படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய் விட … கவலைக்கு இடம் தருகின்ற யோக மார்க்கப் பயிற்சிகளைப் பற்றி எண்ணும் சிந்தனைகள் தொலையவும், கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள … கலக்கத்தைத் தரும் ஐம்புலன்களும் ஒடுங்கி வேரற்றுப் போகவும், என் செயல்கள் எல்லாம் அழியவும், குறைவு அற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற … குறைவின்றி நிறைந்ததான மவுன நிலையை, குணங்கள் அற்ற நிலையை, நான் அடைந்து வீட்டின்பத்தைப் பெறவும், குரு மலை விளங்கும் ஞான சற் குரு நாதா … (அதற்காக) சுவாமி மலையில் விளங்கி வீற்றிருக்கும் ஞான சற் குரு நாதனே, குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து … குமரனே, சரணம் என்று கூதளச் செடியின் புது மலரைச் சொரிந்து, கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ … (உனது) அழகிய இரண்டு திருவடித் தாமரைகளைச் சிந்தித்து உன்னை உணர்வேனோ? சிறை தளை விளங்கும் பேர் … சிறையும் விலங்குமாய்க் கிடந்து விளங்கியவர்களான தேவர்கள் முடிப்புயல் உடன் அடங்கவே பிழைத்து … இந்திரன் முதலான யாவரும் ஒருங்கே பிழைக்கவும், இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி … தேவர்கள் தங்கள் ஊராகிய (அமராவதி என்ற) பொன்னுலகில் குடி போகவும், போரைப் புரிந்து, திமிர மிகு சிந்து வாய் விட … இருள் மிகுந்த கடல் ஓலமிட, சிகரிகளும் வெந்து நீறு எழ … மலைகள் வெந்து பொடியாக, திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் … (சுதர் ன) சக்கரத்தை ஏந்தியவரும் பொன்முடியைத் தரித்தவரும் ஆகிய திருமாலும், பிறை மவுலி மைந்த கோ என … பிறைச் சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானின் மைந்தனே, (சூரனை அழித்தருளுக என்று) இரங்கி வேண்ட, பிரமனை முனிந்து காவல்இட்டு … பிரமனைக் கோபித்துச் சிறையிட்டு, ஒரு நொடியில் மண்டு சூரனை பொருதேறி … ஒரு நொடிப் பொழுதில் நெருங்கி எதிர்த்த சூரனுடன் சண்டை செய்து வென்று, பெருகு மத கும்ப லாளிதம் … பெருகி வருகின்ற மத நீருள்ள மத்தகத்தையும், அழகையும் கொண்ட கரி என ப்ரசண்ட வாரணப் பிடி தனை … யானை எனப்படும் வீரம் கொண்ட (ஐராவதம் என்னும்) வெள்ளை யானையால் வளர்க்கப்பட்ட தேவயானையை மேலும் படிக்க : திருப்புகழ் சுவாமிமலை பாடல் 210 கதிரவனெ ழுந்து மணந்த சேவக பெருமாளே. … மணம் புரிந்த வலிமை வாய்ந்த பெருமாளே. |

