ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 55 சங்குபோல் மென் (திருச்செந்தூர்)

அப்பன் முருகன் பற்றி அருணகிரிநாதர் புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்

பாடல் வரிகள்:

சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற்
     சந்தமோ கின்பமுத் …… தெனவானிற்

றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்
     பென்றுதாழ் வொன்றறுத் …… துலகோரைத்

துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்
     கொண்டுதாய் நின்றுரைத் …… துழலாதே

துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத்
     தொண்டினா லொன்றுரைக் …… கருள்வாயே

வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத்
     துண்டுமே லண்டருக் …… கமுதாக

விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக்
     குண்டுபே ரம்பலத் …… தினிலாடி

செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத்
     தின்கணா டுந்திறற் …… கதிராழித்

திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச்
     செந்தில்வாழ் செந்தமிழ்ப் …… பெருமாளே.

மேலும் படிக்க : திருப்பள்ளியெழுச்சி – 26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *