ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 122 உலகபசு பாச (பழநி)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் இது இப்பாடலை தினமும் படித்தால் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

உலகபசு பாச தொந்த …… மதுவான
     உறவுகிளை தாயர் தந்தை …… மனைபாலர்

மலசலசு வாச சஞ்ச …… லமதாலென்
     மதிநிலைகெ டாம லுன்ற …… னருள்தாராய்

சலமறுகு பூளை தும்பை …… யணிசேயே
     சரவணப வாமு குந்தன் …… மருகோனே

பலகலைசி வாக மங்கள் …… பயில்வோனே
     பழநிமலை வாழ வந்த …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

உலகபசு பாச தொந்தம் அதுவான … உலகத்தில் உயிர், பாசம்
இவை சம்பந்தப்பட்ட

உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர் … உற்றோரும்,
சுற்றத்தாரும், தாய், தந்தை, மனைவி, மக்கள்,

மலசல சுவாச சஞ்சலம் அதால் … மல, மூத்திர, மூச்சு முதலிய
உபாதைகளால்

என் மதிநிலை கெடாமல் … எனது புத்திநிலை கெடாதவாறு

உன்றன் அருள்தாராய் … உனது திருவருளைத் தந்தருள்வாயாக.

சலம் அறுகு பூளை தும்பை … கங்கை நீர், அறுகம்புல்,
பூளைச்செடியின் பூ, தும்பைப் பூ

அணிசேயே … இவைகளை அணியும் சிவபெருமானின் குமாரனே,

சரவணபவா முகுந்தன் மருகோனே … சரவணபவனே, திருமாலின்
மருமகனே,

பலகலை சிவாகமங்கள் பயில்வோனே … பல கலைகளாலும்,
சிவாகமங்களாலும் புகழப்படுவோனே,

பழநிமலை வாழ வந்த பெருமாளே. … பழனிமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *