மார்கழி முதல் நாள் திருப்பாவை, திருவெம்பாவை
மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணா பரமாத்மா தெரிவித்திருக்கின்றார். இந்த மார்கழி மாதம் இறைவன் மாதமாக கருதபப்டுகின்றது. இந்த மாதத்தில் வீதிகளில் அதிகாலை முதல் திப்பாவை, திருவெம்பாவை பஜனையானது செய்யப்படுகின்றது.
மார்கழி மாதத்தில் செய்யப்படும் பூஜைகள் விசேமானது ஆகும். மாழ்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து சாணம் கொண்டு வாசல் மொழுகி கோலமிடுவார்கள்.
அரிசி மாக் கோளம்
மார்கழி மாதத்தில் அரிசி மா கோளமிட்டு, அரசம் பூ கொண்டு பிள்ளையார் பிடித்து வைப்பார்கள் அத்துடன் கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கும். மார்கழியில் கர்நாடக சங்கீத வித்வான்கள் இறைப் புகழ்பாடுவது வழக்கம் மக்கள் அனைவரும் ஒன்றினைத்து பக்தி செய்வது வழக்கமாகும்.
ஆண்டாள் பாடிய திருப்பாவை
மார்கழியில் ஆண்டாள் பாடிய திருப்பாவை மற்றும் மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவை அறிவோம் வாங்க.
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாக திருப்பாவை தொடங்கும். ஆண்டாள் நமக்கு இறைப்புகழ்ப்பாடுவார்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
திருப்பாவையின் முதல் பாசுரமான இதில், பாவை நோன்பு யாருக்காக, யாரை முன்னிட்டு, யார் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வெளியிடுகிறார் ஆண்டாள்.
திருவெம்பாவை-பாடல் 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
பொருள்:
சிவபெருமானை தரிசிக்க அவரை மனதார பக்தி செய்தி பூஜிக்க பாடப்படும் பாட்டானது, கேட்டுகொண்டு உறங்குகிறாயா என்று கேட்க வைக்கும்.
வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!
மேலும் படிக்க : மார்கழி மாத முக்கிய விரதங்கள்