ஆன்மிகம்ஆலோசனைசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

ஒரு லட்சத்து எட்டு தீப ஒளியில் மின்னிய திருப்பூர் திருமுருகன்பூண்டி ஆலயம்

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள திருமுருகநாதசுவாமி திருக்கோவில் கிபி ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான பாரம்பரியமிக்க கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் கோவில் ஒன்றாக போற்றப்படும் இத்திரு கோவில் தேசிய பாரம்பரிய சின்னமாக புகழ்பெற்றது. கொங்கு நாட்டின் புகழ்பெற்ற திருக்கோவிலான திருமுருகன் நாதசுவாமி கோவிலில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார் அதேபோல் அம்பாளுக்கு தனி சன்னதி உள்ளது.

திருக்கோவிலில் நவகிரகங்கள், 63 நாயன்மார்கள், பஞ்ச லிங்கங்கள், துர்க்கை அம்மன் ,தட்சிணாமூர்த்தி, சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் , பவானீஸ்வரர், சூரியன் ஆகிய தெய்வங்கள் தனி சன்னதி பெற்று அருள்பாலிக்கின்றனர். 276 தேவார பாடல்கள் பெற்ற திருத்தலம் ஆகும்.

புகழ்பெற்ற பாரம்பரியத்தை பறைசாற்றும் கொங்கு நாட்டின் ஆன்மீகப் புகழாக விளங்கும் திருமுருகநாத சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை மாத விசேஷம் மிக கோலாகலமாக கொண்டாடப்படும் கார்த்திகை மாத தீபத்திருநாள் விசேஷமாக இங்கு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் கார்த்திகை மாத தீபத்திருநாள் நவம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை வந்த நிலையில் திருமுருகநாதசுவாமி திருக்கோவிலில் ஒரு லட்சத்து எட்டு தீபங்கள் ஏற்றி பக்தர்கள் கார்த்திகை தீப திருநாளை பய பக்தியுடன் கொண்டாடினர் ஒரு லட்சத்து எட்டு தீபங்களின் ஒளியில் கோவிலில் தங்கத்தால் செய்த கட்டிடம் போல ஜொலித்தது. திருப்பூர் மாவட்டத்தின் மிக பெரிய சிறப்புமிக்க கோவிலான இத்திருத்தலத்தில் ஒரு லட்சத்து எட்டு தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வணங்கி வழிபட்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *