திருக்குறள் வாழ்வியல் விளக்கம்
வாழ்க்கைக்கு அனைவரது இல்லத்திலும் திருக்குறள் தேவைப்படுகின்றது. நமது வாழ்வில் அனைத்து பருவங்களிலும் முக்கியமான தேவைப்படும் அறநூல் குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இறைவனை வாழ்த்தி வணங்கி பாடும் பாடலாக திருக்குறள் முதலாக அமைந்திருக்கின்றது. தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் வகையில் உலக மொழிகளின் சிறந்த மொழியாம் தமிழ் மொழி, அதில் உள்ள அகர ஒளியை முதலாக இருக்கின்றது. உலகம் இறைவனாகிய ஆதியின் தொடக்கமாக முதலாக கொண்டிருப்பதை தெரிவிக்கின்றது.
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
இறைவன் ஆதியானவர் மற்றும் அன்பு என்னும் அறிவு வடிவானவர். அவருடைய திருவடியை என்றும் பற்றி இருக்க வேண்டும். அதுதான் கற்ற கல்விக்கு உரிய பயன் தரும். இறைவனை வணங்காதவர் கற்றல் நிறைந்திருந்தவராக இருந்தாலும் அதில் ஒரு பயனும் இருக்காது என்பதை விளக்கி இருக்கின்றது திருக்குறள்.
மேலும் படிக்க : ஆஹா ! அதிகரிக்கும் குரூப் 4 பணியிடங்கள்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
ஞானம் பெற வேண்டும் என மலர்ச்சி மனதில் நிறைந்திருக்க வேண்டும். ஞானம் ஆட்சி பெற்ற மனதில் இறைவன் இருப்பார். இறைவனுடைய திருவடியை எந்நாளும் போற்றி வணங்குவோர் இந்த உலகில் நெடுங்காலம் வாழ்வார் என்று திருவள்ளுவர் தெரிவித்திருக்கின்றார்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தாருக்கு
யாண்டும் இடும்பை இல.
வாழ்க்கையில் ஒரு மனிதன் விருப்பங்களையும் வெருப்புக்களையும் சரிசமமாக கையாள்கிறான் எனில் நன்மை நடக்கும். இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவர். பேதங்கள் காட்டாதவர் அவரது பாதங்களை சேர்ந்தாருக்கு ஒரு துன்பமும் இருக்காது என்பதனை இக்குரள் வெளிப்படுத்துகின்றது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இறைவனுடைய அருளைப் பெற்று பொருளும் புகழுமாய் வாழ்பவர் என்றும் இறைவன் பக்க பலமாக இருந்து அறியாமை இணைக்க செய்வார் நமது பிறவிக்கு காரணம் இறையே என்ற உணர்ந்தவர்களுக்கு இன்பம் துன்பம் கர்ம வினைகள் என்றும் ஒட்டி இருக்காது வந்தவை வந்தவையாக வாடிப்போம்
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான தமிழ்பாட வினாவிடைகள்