குப்பை கார்த்திகை
பாஞ்சராத்திர தீபம்.
கார்த்திகை மாதத்தில் நிகழும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பௌர்ணமியில் கிருத்திகை நட்சத்திரம் இணைந்து வர திருகார்த்திகை தீபமாக கொண்டாடப்படுவதோடு அதற்கு முதல் நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி தீபமாக வீடுகளில் விளக்கேற்றி கொண்டாடுகின்றனர். மேலும் திருக்கார்த்திகைக்கு மறுநாள் பாஞ்சராத்திர தீபம் கொண்டாடப்படுகிறது.
சிலர் இந்த நாளை குப்பைக் கார்த்திகை என குறிப்பிடுவர். முதல் இரண்டு நாட்களில் வாசல் புறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய விளக்குகளை ஏற்றி பண்டிகையை கொண்டாடுபவர்கள் குப்பைக் கார்த்திகை அன்று பின்புறத்திற்கு முக்கியத்துவம் தந்து விளக்குகளை ஏற்றி கொண்டாடுவர்.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 30/11/2020
கிழமை- திங்கள்
திதி- பௌர்ணமி (மதியம் 2:23) பின் பிரதமை
நக்ஷத்ரம்- கிருத்திகை (காலை 7:10) பின் ரேவதி
யோகம்- மரண பின் அமிர்த
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- விசாகம்
ராசிபலன்
மேஷம்- தனம்
ரிஷபம்- பரிசு
மிதுனம்- நலம்
கடகம்- நட்பு
சிம்மம்- வெற்றி
கன்னி- லாபம்
துலாம்- சுகம்
விருச்சிகம்- அமைதி
தனுசு- விவேகம்
மகரம்- பாசம்
கும்பம்- ஆதரவு
மீனம்- நற்செயல்
தினம் ஒரு தகவல்
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தடவி வர ஆறும்.
சிந்திக்க
இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.
மேலும் படிக்க : வீட்டில் ஆன்மீகம் செழிக்க கடைப்பிடிக்க வேண்டியவை!