வீரர்களை பெண் வடிவத்தில் மாற்றி புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.
முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அண்மையில் பேஸ் ஆப் செயலி மூலமாக தற்போது உள்ள இந்திய அணி வீரர்களான தோனி, விராட் கோலி, புவனேஷ் குமார், சாஹல் உள்ளிட்ட வீரர்களை பெண் வடிவத்தில் மாற்றி அமைத்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.
மேலும் இதில் நீங்கள் யாரை தோழியாக ஏற்க விரும்புகிறீர்கள் என்று அவரை பின் தொடர்பவர்களுக்கு ஒரு கேள்வியையும் முன் வைத்துள்ளனர்.
இதற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணியில் இருந்த சச்சின், யுவராஜ், கங்குலி உள்ளிட்டோரை, பேஸ் ஆப் மூலம் பெண்ணாக மாற்றி இதில் நீங்கள் யாருடன் டேட் செய்ய ஆசைப்படுகிறீர்கள். என வீரர்களுக்கு கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு வீரர்கள் பலரும் தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலியை குறிப்பிட்டு உள்ளனர். யுவராஜ் சிங் இந்த பேஸ் ஆப் சவாலில், புவனேஷ் குமார் வெற்றியாளராக அறிவித்துள்ளார். ஹர்பஜன் சிங்கும், புவனேஷ் குமார் தான் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தப் பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செயலி மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை பெண்ணாக மாற்றிய யுவராஜ் சிங் ஒரு விளையாட்டு விளையாடி உள்ளார் போல் தெரிகிறது.