செய்திகள்

இந்த விஷயங்கள்…உங்களுக்கு தெரியுமா..?

1-நத்தைகள் ஏன் நீண்ட நேரம் தூங்குகின்றன..?

நத்தையால் மூன்று வருடங்கள் வரை இடைவிடாமல் தூங்க முடியுமாம். நத்தைகள் உயிர்வாழ ஈரப்பதம் தேவை; வானிலை ஒத்துழைக்கவில்லை என்றால், அவர்கள் உண்மையில் மூன்று ஆண்டுகள் வரை தூங்கலாம். இந்த நேரத்தில், நத்தைகள் வறண்ட, வெப்பமான வானிலையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் உடலில் சளியை சுரக்கும்.

2- இந்தியாவில் ஏன் விவாகரத்து விகிதம் குறைவாக உள்ளது..?

உலகிலையே இந்தியாவில் தான் குறைவான விவாகரத்துக்கள் நடைபெறுகிறதாம். குழந்தைகளின் இருப்பு, மறுமணப் பிரச்சினை, பெண்களிடையே நிதிச் சுதந்திரமின்மை , குடும்பங்களின் ஆதரவின்மை, குடும்பங்களின் நற்பெயருக்கு சேதம், சமூகத்தின் தீர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் ஆகியவற்றால் இந்தியா குறைவான விவாகரத்து செய்யும் நாடாக உள்ளதாம்.

3- உறவினர்களை ப்ளாக் செய்யும் இளைஞர்கள்..?

70 % இளைஞர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய உறவினர்களை ப்ளாக் செய்துள்ளார்களாம். மேலும் தங்களது தனியுரிமையை பாதுகாக்க நான்கில் ஒருவர், போலியான தகவல்களுடன் சமூக வலைதளங்களில் உலாவுகின்றார்களாம்.

4- திருமணமாகாமல் குழந்தை பிறப்பு ..?

பிரான்ஸ் நாட்டில் 60 % பேருக்கு திருமணமாகாமலே குழந்தை பிறந்துள்ளது. திருமணமாகாமல் பிறந்த குழந்தைகளில் பெரும்பான்மையுடன் உலகிலையே பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. கிரீஸ் மிகக் குறைந்த விகிதத்தைக் கொண்டுள்ளது, அங்கு பத்தில் ஒன்பது குழந்தைகள் ஏற்கனவே திருமணமான பெற்றோருக்குப் பிறந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *