இருமலில் பலவகை இருந்தாலும், அத்தனை இருமலுக்கு ஒரே தீர்வு..!!
இருமல் என்றாலே அருகில் இருப்பவர்கள் நம்மை பார்த்து ஒதுங்குவார்கள். பார்த்தல் ஒட்டிவிடுமா என்ன? ஒரு பக்கம் இருமல் படுத்தும் என்றால், இன்னோரு பக்கம் அருகில் இருப்பவர்கள் படுத்துவார்கள் தானே? எங்கள் வீட்டில் நாங்கள் உபயோகபடுத்திய இருமல் டிப்ஸை உங்களுக்காக இங்கே பகிர்கின்றேன். இதை தெரிந்து கொண்டு நீங்களும் முயற்சி செய்து எங்களுக்கு கமெண்ட் பண்ணுங்க.
எந்த வகை இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். பத்து கிராம் சீரகத்தை ஒரு சட்டியில் லேசாக வறுத்து எடுத்து, அமியில் வைத்து நுணுக்கி கொள்ளவும். இதனுடன் சம அளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டப்பாவில் வைத்து கொள்ளவும். இந்த தூளை காலை, மாலை என இரு வேளை மூன்று நாட்கள் சாப்பிட இருமல் குணமாகும்.
காரத்திற்கு பதில் மிளகை பயன்படுத்தினாலே சளி தொந்தரவு அண்டாது
சளிக்கு ஏற்படும் இருமலை தடுக்க, ஒரு வாணலியில் மிளகு ஒரு ஸ்பூன் சேர்த்து வறுத்து ஒரு டம்பளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, இரண்டு வேளை சமமாக வைத்து குடிக்க சளி இருமல் கட்டுபடும். இதை எடுக்கும் போது மற்ற ஆங்கில மருந்துகளை எடுக்க வேண்டாம். பொதுவாக உணவில் காரத்திற்கு பதில் மிளகை பயன்படுத்தினாலே சளி தொந்தரவு அண்டாது.
சூட்டினால் வரும் இருமலாக இருந்தால், மிளகு பொடி செய்து இதனுடன், பனை வெள்ளம், சேர்த்து சுண்டைக்காய் அளவு இரண்டு நாள் இரண்டு வேளை சாப்பிட குணமாகும். வறட்டு இருமலாக இருந்தால் பசும்பாலில், ஏலக்காய், மிளகு, பொடித்து, மஞ்சள் தூள், பனங்கற் கண்டு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி இரவு தூங்கும் முன் குடிக்கவும். மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்தால் வறட்டு இருமல் கட்டுப்படும்.
நாய் துளசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் கோழை இருமல் கட்டுப்பட்டு, உடல் புத்துணர்வு பெறும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு சம அளவில் கலந்து, மூன்று நாட்கள், வேளைக்கு ஒரு ஸ்பூன் குடிக்க இரைப்பு இருமல் குணமாகும். நன்றாக காய்ச்சிய பாலுடன், மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து குடிக்க கட்டுப்படும்.
சித்தரத்தை பத்து கிராம் அளவு வறுத்து நூறு மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு கலந்து குடிக்க தொடர்ந்து வரும் இருமலை தணிக்கும். இருமலில் பலவகை இருந்தாலும், இதில் கபத்தினால் வரும் இருமல் பாடாய் படுத்தும். குழந்தைகளுக்கு, கற்பூரவள்ளி இலை சாறை தேன் கலந்து கொடுக்க குறையும். வறட்டு இருமலுக்கு திப்பிலி கொதிக்க வைத்த சாறுடன் தேன் கலந்து கொடுக்க தணியும். நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க
வியாதிகள் வேகமாக பறக்க.. ராகியை விரும்பி சாப்பிடுங்க..!!
ஹல்லோ லேடீஸ் இந்த அறிகுறிகள் இருக்கா… அப்போ இஃதெல்லாம் உங்களுக்கு தான்..!!