நடராஜனின் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் நட்டை கழட்டுகிறது
தமிழ்நாட்டை சேர்ந்த தங்கராசு நடராஜன் ஐபிஎல் டி20 2020 தொடரில் பிரமாதமாக விளையாடி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு சர்வதேச ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி பட்டியலில் இடம் பெற்றார். இந்திய அணி பட்டியலில் இருந்தாலும் பிளையிங் 11 என்று சொல்லப்படும் 11 விளையாட்டு வீரர்களில் இடம் கிடைக்கவில்லை. இன்றைய தொடரில் களம் இறங்கியுள்ளார்.
- தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரே இன்று களமிறங்குகிறார்.
- களமிறங்கிய சிங்கம் முதல் விக்கெட்டை எடுத்து கம்பீரமாக கர்ஜித்தது.
தங்கராசு நடராஜன்
தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் தங்கராசு நடராஜன். ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடினார்.
தி யாக்கர் கிங்
நடராஜனின் பந்துவீச்சு திறமை பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இவருடைய பந்துவீச்சு இவருக்கு புதிய அடையாளத்தை தந்தது. “தி யாக்கர் கிங்” என பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இவரைப் பாராட்டினார்கள்.
இந்திய அணி
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடுவிலான ஒரு நாள் போட்டி தொடரில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பிலிருந்த மக்களுக்கு முதல் தொடர் ஏமாற்றத்தை அளித்தது. அதோடு இந்திய அணி அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
முதல் தொடரில் தோல்வி
தோல்வியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனை களமிறக்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். இவரின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்க தங்கராசுவின் தாறுமாறான பந்துவீச்சில் திக்குமுக்காடி இருக்கும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்.
மூன்றாவது ஒரு நாள்
ஒருநாள் தொடரில் 3-வது ஆட்டத்தில் தன்னுடைய முதல் விகெட்டை எடுத்து பட்டையை கிளப்பியுள்ளார் தங்கராசு நடராஜன். நாலு ஓவர்கள் முடிந்த பின் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார். ஓபனிங் பேட்ஸ்மேன் விக்கெட்டை பவர் பிளே ஓவரில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டையைக் கிளப்பிய பேட்டிங்
விராட் கோலி ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அபாரமான மட்டை வீசால் 305 என்ற இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா நிர்ணயித்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி வாகை சூடும் என்ற நம்பிக்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.