நேரடி ஆய்வின் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடல்நிலை பற்றி உங்களுக்காக
ஒவ்வொரு நாளும் மனிதர்களைப் பாடாய் படுத்தும் கொரோனா விடமிருந்து மீண்டு வந்த நபர்களைக் கேட்டாள் அவர்கள் கூறுவது ஆரோக்கியத்தை பற்றி அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. இந்தக் கொரோனா வந்தபிறகு உடலளவில் ஆற்றல் குறைபாடு இருப்பது போல உணர்வதாகவும், அரை கிலோ மீட்டர் நடந்தால் உடல் சோர்வு ஏற்பட்டு விடுவதாகவும், மனதளவில் கொரோனா குறித்த விழிப்புணர்வு இருப்பதால் சிலர் அறியாமையால் செய்யும் செயல்களைப் புரிந்து கொண்டு செயலாற்ற முடிகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
பலரிடமிருந்து வரும் பொதுவான பதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தான். சிலர் சொல்வதற்கு தயங்கி மறுப்பு தெரிவித்துக் கொள்கின்றனர். சிலர் இப்படியொரு போன்கால் வருவதையே விரும்புவதில்லை. மிக சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாகவும் என்னை ஒரு வாரம் மட்டும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி விட்டு அனுப்பி விட்டார்கள் என்றும் தற்போது எனக்கு மனதளவிலும் சரி, உடல் அளவிலும் சரி எந்த மாற்றங்களும் இல்லை என்றும் ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர்.
உண்மையில் உடல் முன்பு போல் இல்லை. முன்பெல்லாம் மூன்று கிலோ மீட்டர் மைதானத்தில் பத்து சுற்று நடைபயிற்சியும், பத்து சுற்று ஓட்டப் பயிற்சியை மேற்கொள்பவர்கள் தற்போது அப்படி முடிவதில்லை. இத்தனை செய்த அளவிற்கு பிறகும், நமது உடல் ஆரோக்கியமாக பார்த்துக் கொண்ட போதும் கூட நமக்கு கொரோனா வந்து விட்டது என்று குற்ற உணர்ச்சியும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
முன்பெல்லாம் பசித்தால் மட்டுமே சாப்பிடுவோம். ஆனால் தற்போது மூன்று வேளையும் கட்டாய உணவை எடுத்துக் கொள்கிறோம். சக நபர்கள் குறித்த நம்பிக்கையின்மையும் அதிகரித்து வருகிறது. சீனாவில் வுகான் நகரில் உள்ள கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களும் குழுவில் இருந்து மீண்டு பல மாதங்கள் ஆன போதிலும் இவர்களுக்கு தற்போது நுரையீரல் பாதிப்பு இருப்பதாகவும். இவர்களின் நுரையீரல் செயல்பாடு முன்புபோல் முழு திறனும் செயல்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குள்ள உணவு மற்றும் தட்பவெப்ப நிலை மாறுபாட்டுக்கு ஏற்ப அவர்களின் உடல் நிலை மாற வாய்ப்பிருக்கிறது. என்றாலும் இந்தியாவில் நிலைமை எப்படி இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடல்நிலை எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு.
கொரோனாவை வென்ற வெற்றியாளர்களை தொடர்பு கொண்டு பேசி அதன்படி கிடைத்த தகவல்களை இங்கு உங்களுக்காக இந்தப்பதிவில் பகிர்ந்துள்ளோம்.கொரோனாவிலிருந்து மீனவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று ஆய்வின் மூலம் தெரிவித்த இப்பதிவை பார்த்த பிறகாவது இனி நாம் நம் கடமையை சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது.