தனித்துவம் வாய்ந்த மனிதர்கள்
அனைவருக்கும் கவலைகள் உண்டு
அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் ஏதோ ஒரு கவலை, ஏதோ ஒரு சோகம் இருந்து கொண்டேதான் உள்ளது. ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சைகள் மற்றொரு நபரின் வாழ்வில் நடக்கும் துக்கங்களுக்கு ஏற்றக்குறைவல்ல. அவரவர் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் அவரவருக்கு பெரிதே. இங்கு நம் கவலை சோகங்களை பிறரின் வாழ்க்கையை கொண்டு ஒப்பிட தேவையில்லை
அனைவருக்கும் ஒரு துணை தேவை
அவரவர் வாழ்வில் நடக்கும் கவலைகளையும் துக்கங்களையும் தீர்க்க மற்றும் மறக்க இயல்கிறதோ இல்லையோ, பகிராமல் பல நபர்களால் இருக்க இயல்வதில்லை. அப்படி தங்கள் வாழ்வில நடக்கும் சுக துக்கங்களை பகிர ஒரு மனிதர் தேவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
வாடகைக்கு மனிதர்களை வழங்கும் இணையதளங்கள்:
இப்படி ஒரு புறம இருக்க, மற்றொரு புறம் வேடிக்கையான சில நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது. இங்கு மனிதர்களின் கவலைகளை பகிர ஒவ்வொருவரும் ஒவ்வொரு துணையை தேடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கான ஒரு நபர் கிடைக்காததால் சிலர் இணையதளங்களில், தங்களின் குமுறல்களை பகிர அறிமுகம் இல்லாத ஒரு நபர் கிடைத்தால் போதும் என்று புலம்பிக்கொண்டு இருக்கின்றனர்.
இதில் வேடிக்கையான நிகழ்வு என்னவென்றால், மனிதர்கள் அவர்களின் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வதற்கு என்றே ஒரு வெளிநாட்டு நிறுவனம் தங்களின் தொழிலாளர்களை இதற்கென்றே வாடகைக்கு அனுப்பச் செய்கின்றனர். இதற்கு கட்டணங்கள் உண்டென்பதும் தவிர்க்க முடியாத உண்மை. என்ன செய்வது மனிதர்களின் ஒவ்வொரு உணர்ச்சிகளும் வியாபாரம் ஆயிற்றே!
தனித்துவம் வாய்ந்த மனிதர்கள்
தொண்ணூற்றி எட்டு சதவீத மனிதர்கள் இப்படி இருக்க, சிவ வகை அரிய மனிதர்கள் மட்டும் தங்களின் நட்டங்களை, கவலைகளை மற்றும் துக்கங்களை வெளிய கூறாமல் தாங்களே அதை சரியாக அணுகி சரி செய்யும் பக்குவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று உளவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இப்படிப்பட்ட மனிதர்கள் மட்டுமே அசாத்திய வெற்றிகளை குவிக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரிகளின் மன ஆற்றல் மற்றும் மன வலிமைக்கு எதிரே பிற மனிதர்களால் நிற்க முடிவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.