ஐரோப்பாவில் பொது முடக்க தளர்வால் மீண்டும் தொற்று பரவல்.
ஐரோப்பாவில் பொது முடக்க தளர்வால் மீண்டும் தொற்று பரவுகிறது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடைய எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் கோடியை எட்ட கூடும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
பொது முடக்க தளர்வுகள் அளிக்கப்படுவதால் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்தது.
ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் க்லுக் செய்தியாளர்களை சந்தித்தார். இரு வாரங்களாக ஐரோப்பாவில் உள்ள 30 நாடுகளை பூரண பாதிப்பு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
11 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு விகிதம் மிக அதிகமாக இருந்ததால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்த நாடுகள் மீண்டும் தொழுநோயின் ஹாட்ஸ்பாட் ஆக மாறலாம் எனவும் எச்சரித்துள்ளது.
நாடுகளின் பெயர்கள் மற்றும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை அவர்கள் தெரியப்படுத்த வில்லை. ஜெர்மனியில் புதிய பாதிப்புகள் உயர்ந்துள்ள நிலையில் இரு மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்க அறிவிக்கப்பட உள்ளது. என்ற தகவல் வெளியாகியுள்ளது.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுவீச்சில் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்த போவது குறிப்பிடத்தக்கதாகும்.