அழகு குறிப்புகள்ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

அழகின் ரகசியம் என்னவா இருக்கும்..!!

கற்றாழை இயற்கையாகவே குளிர்ச்சியை வழங்கும். உடலுக்கு சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும், இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

மேனி பளபளப்பாக

குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும். கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். எண்ணையுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம், கழுத்து, கை, கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும்.

உடனடி டாக்டர் கற்றாழை

தோல் நோய்கள் வராது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ச்சி காணப்படும். ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள், காயங்களுக்கும், உடனடி நிவாரணம் பெற, கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங் களுக்கு உடனடி டாக்டர் கற்றாழைச் சாறுதான். இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

குளிர்ச்சி தரும் ஆயில்

குளிர்ச்சி தரும் குளியலுக்கு, மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை 1/2 கிலோ, ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து, எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சி தரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம், என சரும நோய் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். கண்களில் அடிபட்டால் இதர காரணங்களாலோ, கண் சிவந்து வீங்கியிருந்தால், கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும்.

மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து ஒரு துணியில் முடிச்சுக் கட்டி தொங்க விட்டு, ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து சொட்டு சொட்டாக மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். கூந்தல் வளர சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால் சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்.

தூக்கமும் நன்றாக வர

இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளர்வதுடன், தூக்கமும் நன்றாக வரும். கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை.

இன்றைய உலகில் சோப்பு, ஷாம்பு அழகு சாதன பொருட்கள் முதல் நவீன மருந்துகள் வரை பெரும்பாலான தயாரிப்புகளிலும் முக்கிய மூலப் பொருளாக இடம் பெற்றிருப்பது. கற்றாழை நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. கிராமப்புறங்களில் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளன, என்பதில் இதற்கு மேலும் சான்றுகள் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *