யார் பலசாலி?
யாரை இங்கு பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்?
உடற்பயிற்சி செய்து எதிர்பாலினரை கவர்பவனா?
ஐநூறு தண்டால்கள் எடுப்பவனா?
உடற்பயிற்சி மையங்களுக்கு சென்று கனமான பொருட்களை தூக்கி உடலை மெழுகேற்றி ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெருபவனா?

யார் உண்மையில் பலசாலி? நம்மில் பல நபர்களுக்கு பலசாலி என்ற வார்த்தையை கேட்டவுடன் நம் பார்வைக்கு வரும் நபர்கள் இவர்களே. ஆனால் சற்று ஆளமாக ஆராய்ந்து பார்த்தால் கனமான உடற்பயிற்சி செய்து உடலை மெழுகேற்றிய நபர்களுக்கு வாழ்வில் வரும் துயரங்களை கையாலும் அளவிற்கு பலமாகதான் உள்ளார்களா என்று கேள்வி எழுப்பினால் அதற்கான முகம் சுளிக்க வைக்கும் உண்மை இல்லை “இல்லவே இல்லை” என்றுதான் சொல்ல வேண்டும்.
அதை எப்படி நம்ப முடியும் என்ற கேள்வி இருந்தால் பதில் உண்டு.
ஓர் சிறிய ஆதாரம்
ஆதாரம் நம் குடும்பத்தாரிடமோ நண்பர்களிடம் இருந்தோ அல்ல நம்மை சுற்றி உள்ள சமுதாயத்திடம் இருந்தோ அல்ல நாம் பாக்கும் திரைப்படங்களில் இருந்தே ஆதாரங்களை சற்று ஆராய்வோம்.
தமிழ் பட உடற்பயிற்சி ஜாம்பவானை பிரபல யூடியூப் சேனல் பேட்டி எடுத்த போது அந்த ஜாம்பவான் கூறியதை பின்வறுமாறு பார்ப்போம்,
‘உடற்பயிற்சி சாதகர்கள் மற்றும் கட்டுமஸ்தான உடம்பை வைத்திருப்பவர்கள் எல்லாம் முரட்டுத்தனமானவர்கள் இல்லை எங்களின் மனம் குழந்தையை போன்றது, அதுமட்டும் அல்ல எங்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தால் எங்களின் கண்களிலும் கண்ணீர் வரும், நாங்களும் மனிதர்களே’
என்று அவர் கூறினார்.
அப்பொழுது யார்தான் இங்கு பலசாலி? உடலை கட்டு மஸ்தானாக வைத்திருப்பவர்களா? 150கிலோ இடையை தலைகளுக்கு மேல் தாங்கி அனைவரின் முன்பும் காட்சி கொடுப்பவரா?
இல்லை
இவர்களே பலசாலி
பல தோல்விகள் தேடி வரினும் நெஞ்சை நிமிர்த்தி சற்றும் கலங்காமல் வா பார்த்துக் கொள்ளலாம் என்று எழுந்து நிற்கும் ஒவ்வொருவரும் பலசாலியே!
வாழ்க்கை துவண்டு கிடக்கும் சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பினும் அனைத்தையும் சிரித்துக் கொள்ளும் இயல்பை கொண்டவர் அனைவரும் பலசாலியே!
இதை செய்தால் நீங்களே பலசாலி
நீங்கள் 80கிலோ அல்லது 100கிலோ இடையை கொண்டு இருந்தாலும் உங்களின் மன வலிமையால் விடிய காலையில் வெறும் 2கிலோ இடையை கொண்ட உங்கள் போர்வையை தூக்கும் ஆற்றல் இல்லையென்றால் அவ்வளவு இடையை வைத்து என்ன பயன்?