அன்பும் உறவும்

இப்படி ஒரு துணை கிடச்சா லைப் சூப்பர் பாஸ்

சமூகத்தின் எதிர்பார்ப்பு

பொதுவாக துணையை தேர்ந்தெடுக்க துவங்கும் பொழுது ஒவ்வொருவரும் தம் எதிர்பாலினரை ஏதோ வாகனம் வாங்க செல்வது போல் ஸ்பெசிபிகேஷன்ஸ் (specifications) முடிவு செய்து, கண்கள் இவ்வளவு கருமையாக இருக்க வேண்டும், புருவம் அனுஷ்கா போல் இருக்க வேண்டும், உதடுகள் எமி ஜாக்ஸன் போல் இருக்க வேண்டும், நிலம் இவ்வளவு இருக்க வேண்டும் , இப்படிப்பட்ட லட்ச்சியத்தை கொண்டிருக்க வேண்டும் என்று பட்டியலிட்டு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

எதார்த்தம்

பெரும்பாலும் இந்த உலகில் தங்கள் கனவு நாயகனாக வடிவமைத்து வைத்திருந்த துணையை சந்திக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் துணையாக வந்த பின் அவர்கள் கடந்த காலத்தில் எப்படி இருந்தார்களோ அப்படியே இருப்பார்கள் என்று உறுதி கூறுவதும் இயலாத காரியம் என்பதே நிதர்சனமான உண்மை.

நமக்கு நாமே உறுவாக்கி வைத்துள்ள கற்பனை உலகம்

நம்மில் பெரும்பானவர்கள் கற்பனை உலகத்திலேயே மிதந்து கொண்டிருக்கிறோம். கற்பனையிலேயே வாழவும் செய்கிறோம். பிற செயல்களில் நம் கற்பனையால் எடுக்கும் முடிவுகள் தோல்வி பெறுவதில் பெறும் பாதிப்புகற் ஏற்படுவதில்லை.

ஆனால்,

துணையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பான செயலில் நம் கற்பனை உலகத்தை விட்டு சற்று வெளியே வந்து சற்று திடமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமே

ஜாதி திருமணங்கள்

இன்றுள்ள இளைய சமுதாயம் தொண்ணூற்றி ஒன்பது புள்ளி ஒன்பது சதவீதம் இவ்வகையான திருமணங்களில் விருப்பம் காட்டுவதில்லை. இதை நிராகரித்து தாங்களே துணையை தேடி கொள்ளும் வாழ்க்கையிலாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. இந்த நிராகரிப்பிற்கு காரணமும் அவர்களின் கற்பனை உலகமே.

யார் துணை?

இவ்வளவு எதார்த்தமான உண்மைகளை பார்த்தாலும் உண்மை துணை யார்? எப்மடிதான் இருக்க வேண்டும் என்ற கேள்வி நம்மில் பலபேருக்கு இருக்கின்றது. அதற்கான இலக்கணம்தான் என்ன என்று கேட்டால்,

உங்களை எந்த வகையிலும் மாற்ற முற்படாமல், உங்களின் இயல்பை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒரு துணை கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே. இதை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்,

அனைவருக்கும் அவரவர் வாழ்க்கையில் தனிப்பட்ட இரகசியங்கள் இருக்கும். அந்த இரகசியங்கள் அனைத்தையும் அப்படியே உங்கள் துணையிடம் சொல்ல உங்களுக்கு எவ்விதமான அச்சமும் இல்லையெனில் நீங்களே சிறந்த தம்பதியர். இங்கு இரகசியங்கள் என்று குறிப்பிடுவதில் அனைத்தும் அடக்கம். பெரும்பாலும் இப்படிப்பட்ட துணை அமையும் என்பது எதிர்பாராத செயல்களில் ஒன்றே. அப்படி அமைந்தால் “வாழ்க வளமுடன்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *