செப்டம்பர் 14 நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கேள்விக்கு அனுமதி
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளன.
இத்துடன் அரை மணி நேரம் மட்டுமே கேள்வி நேரத்திற்கு அனுமதி என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. துறை சார்ந்த அமைச்சரிடம் இருந்து நேரடியாக பதிலை பெறும் வகையிலான கேள்விகளுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ பதிலை பெறக்கூடிய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப் பட்டன. செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வைரஸ் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையை ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் செயல் என்றும் அடிப்படை அரசியலுக்கு எதிரானது என்றும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
முன்பே கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த எம்பிக்கள். அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்த பிறகு தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். தற்போது கூட்டத்தொடர் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
கேள்வி நேரம் இருந்தபோதும் பத்து கேள்விகள் இருந்தால் 10 கேள்விகளையும் கேட்பதற்கு நேரமிருக்காது. 4-5 கேள்விகள் தான் கேட்கப்படும். அப்படி இருக்கும் போது சுத்தமாகவே கேள்வி நேரத்தில் நீக்குவது உறுப்பினர்களின் உரிமைகளை பறிப்பதாக தான் இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கேள்வி நேரத்துக்கு அனுமதி. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அரை மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.