வாழ்க்கையில் மேன்மை அடைய வேண்டுமா? விரதம் இருங்க.!
வாழ்க்கையில் மேன்மை அடைய வேண்டுமா? விரதம் இருங்க. நாம் விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கி விடும்.
மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடைபெறுகின்றது. பழங்களை உண்டு விரதம் இருப்பது ஒரு வகை விரதம். நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை விரதம்.
நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும். வாழ்வில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இனி 2 நாளிலோ அல்லது வாரம் ஒரு நாள் விரதம் இருப்போம்.
ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளில் திங்கள் சோம வாரம், வியாழன் குருவாரம் கிழமைகளில் விரதம் நமக்கு நன்மையை ஏற்படுத்தக்கூடியவை.
அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலு சேர்க்கும் என்று கூறப்படுகிறது. விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடல் இருக்கும் சக்தியையும், நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடிகிறது.
விரதம் இருத்தல் என்பது உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது. வாய் எனும் உறுப்பு, பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும்.
ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மற்றும் பேசுதல். இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக கூறப்படுகிறது.
விரதங்களில் வாய் மூலம் அனுஷ்டிக்கும் விரதங்களும் உண்டு. அதாவது மௌனவிரதம் சஷ்டியப்தபூர்த்தி முடித்த முதியவர்கள், வியாதியினால் மருந்து உண்பவர்கள், கர்ப்பிணிகள், பிரம்மச்சாரிகள், சன்யாசிகள் இவர்களைத் தவிர மற்றவர்கள் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.