கட்சியே ஒரு குடும்பமாக பாஜக…வைரலாகும் புகைப்படம்…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சாப்பாடு பரிமாறும் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் காலுன்ற பாஜக பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. அதற்காக ஆட்சியில் இருந்த அதிமுகவை பாஜக பயன்படுத்திக்கொண்டதாக அரசியல் நிபுணர்கள் விமர்சித்து வந்தனர். இருந்த போதிலும் அதைபற்றி காவலைபடாத பாஜகவினர் தமிழகத்தில் பாஜக காலுன்ற தீவிரமாக உழைத்து வந்தனர்.
அதன்படி தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும் என செல்லும் இடங்களில் எல்லாம் முழங்கி வந்த தமிழிசை சவுந்தராஜன் பாஜக சார்பில் தூத்துக்குடியில், பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கினார். அப்போது அவர் திமுக சார்பில் களம் இறங்கிய கனிமொழிக்கு டாப் கொடுத்து வந்தார். இருந்த போதிலும் தமிழிசை சவுந்தராஜன் அதில் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் தெலங்கான மாநிலத்தின் ஆளுநராக பாஜக தலைமையிலான அரசு நியமித்தது. இதனை பிடித்துக் கொண்ட பாஜகவினர், பாஜகவில் சாதாரன தொண்டன் கூட பெரிய பதவிக்கு வரக்கூடும் என்றும், ஆனால் திமுகவில் அப்படியில்லை என்றும், அது வாரிசு கட்சி என்றும் கூறி வந்தனர்.
அந்த வகையில் ஆளுநர் தமிழிசை அவர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உணவு பரிமாறும், புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கட்சியே ஒரு குடும்பமாக பாஜக. குடும்பமே ஒரு கட்சியாக திமுக என பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர்.