அன்பும் உறவும்வாழ்க்கை முறை

நட்புக்கு தேவை இதாங்க..!!

நாம் பள்ளிப் பருவம் முதலே ஒவ்வொரு விஷயத்தையும், படிக்கும் பருவத்திலிருந்து, ஒவ்வொரு வகுப்பிற்கு செல்லும் போதும், ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். இதில் முக்கியமாக இடம் பெறுவது படிப்பு மட்டும் இல்லைங்க. நம்மளுடைய நண்பர்களும் தான்.

நம் கைகளில்

ஒவ்வொரு வகுப்பிற்கும் போகும் போது ஒவ்வொரு நண்பர்கள் கிடைத்தாலும், அந்த நட்பு கடைசி வரை நம் வாழ்நாளில் தொடருமா என்ற கேள்விக் குறி எல்லோரிடத்திலும் உண்டு. இப்படி ஒரு நட்பு கிடைக்க நாம் தான் காரணம். அதை நல்ல நட்பாகவும் மாற்றி அமைப்பதும் நம் கையில் தான் உள்ளது.

உங்களுக்கு கிடைக்கும் நட்பு எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என்று நினைத்துப் பாருங்கள். நமக்குத் தேவை என்று வரும் பொழுது நம்மளுடைய துக்கத்தையோ, சந்தோஷத்தையும் பகிர்வதற்கு துணையாக வருவது நம் நட்பு மட்டுமே. பெண் தோழியோ, ஆண் தோழன் யாராக இருந்தாலும் ஒருவருடன் ஒருவர் நட்பு பாராட்ட முடியும்.

எந்த ஒரு நட்பிற்கும் ஒரு வரம்பு உள்ளது. அந்தரங்க விஷயத்தை பகிர்தல் கூடாது. இதன் பிறகு அது ஒரு ரகசியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பின்னால் ஒரு பிரச்சனை வந்தால், அது இந்த நண்பனால் தான் வந்ததோ என்று தேவையில்லாத சந்தேகங்களை நமக்குள் ஏற்படுத்தும். இதை தவிர்ப்பதற்கு நாம் தேவையற்ற விஷயங்களை பகிராமல் இருப்பது நன்மையளிக்கும்.

நல்ல நண்பர்களுடன் சண்டை வருவது இயல்பு தான். நல்ல நண்பர்கள் நம்முடைய எதிர்காலத்துக்கு, எப்பொழுதும் துணையாக இருப்பார்கள். எதிர்பார்ப்புகளை சொன்னாலும், பிரச்சனைகளை சொன்னாலும், அதற்கு வழி கொடுக்க தயங்க மாட்டார்கள். நல்ல நண்பர்கள் பொழுதை வீனாக காலம் கழிக்கும் நண்பர்களை நல்ல நண்பர்களாக கருதிவிட முடியாது.

நல்ல நட்பு கெட்டுப் போகக்கூடிய சூழலை ஏற்படுத்தும், அதை எப்படி எடுத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. எப்படி இருந்தாலும் தோள் சாய ஒரு நல்ல நட்பு தேவைப்படுகிறது. எதையுமே பகிர்ந்து கொள்ளாதவர்கள் எத்தனை உயரிய ஸ்தானத்தில் இருந்தாலும் கடைசியில் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

இந்த சிக்கலை என்னால் சீரமைக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்குள் எல தொடங்கிவிட்டால் அப்போதே அதை உங்களுக்கு நம்பிக்கை உரியவர்களிடம் பகிர்ந்து பாருங்கள். உறவுகளில் பல வகை இருந்தாலும் நட்பு என்ற தனி வார்த்தைக்கு கிடைக்கக்கூடிய கௌரவமே தனிதான்.

நண்பர்களை நினைத்தால் அந்தக் காலங்களில் கண் முன்னே வரும் உடனடியாக அலைபேசியில் நண்பர்களை தொடர்பு கொண்டு என் நண்பன் போட்ட சோறு நித்தமும் தின்னேன் பாரு, நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன். என்றெல்லாம் பாடல் வரிகள் உண்டு. வாழ்க்கையை வாழ வைப்பவன் இறைவன்.

பகிர்ந்து கொள்வது

வாழத் தெரிந்தவன் மனிதன். தூக்கி விடுபவன் நல்ல நண்பனாக இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு நல்ல நட்பை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். பகிர்ந்து கொள்வது ஒரு நல்ல நண்பர். அந்த பகிர்தல் உங்களுக்கு பாதிப்பு வராமலும் பார்த்துக் கொள்வதில் தான் தனி சாமார்த்தியம் அடங்கி இருக்கிறது.

நண்பர்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைத் தொடர்ந்து அதை குறித்து பேசுவதை தவிர்த்து விடுதல் நல்லது. புற விஷயங்களை பகிர்ந்து கொள்வது போல, சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல நட்பு வேண்டும் என்று நாம் நினைக்கலாம். எல்லோரும் நல்லவரே என்பது நம்மில் பலரின் எண்ணம்.

ஆனாலும் இது ஒரு வெகுளித்தனம் ஆகும் இவற்றை கருத்தில் கொண்டு நல்ல நண்பர்களை இழக்காமல் கூட வைத்துக் கொள்வதால் நம் வாழ்க்கையில் பல விஷயங்களை சாதிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *