ஆன்மிகம்ஆலோசனை

ஆனி மாதம் பொறந்தாச்சு.!

இந்த வார விசேஷங்கள் இன்று மாதப்பிறப்பு ஆனி 1 தசமி திதி. நாளை ஏகாதசி. ஆனி 4 பிரதோஷம். ஆனி 5 சிவராத்திரி. ஆனி 6 அம்மாவாசை. அன்றைய தினம் சூரிய கிரகணம் வருகிறது. இவை இந்த வார விசேஷங்கள்.

மாதத் தொடக்கம் இன்று அன்னதானம் செய்யலாம். குல தெய்வ வழிபாடுகள், முன்னோர்களையும் வழிபடுவதால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

இந்த வார விசேஷங்களை முதலில் தெரிந்து கொள்வதால் அன்றைய நாட்களுக்கு தேவையான விசேஷ தினங்களில் முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கான ஏற்பாடுகளை முன்னரே செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிரதோஷத்தன்று கார்த்திகையும்

இந்த வாரம் பிரதோஷத்தன்று கார்த்திகையும் வருகிறது. பிரதோஷ விரதமும், கார்த்திகை விரதமும் ஒரே நாட்களில் வருவதால் அதற்கு தகுந்த ஏற்பாடுகளை முன்னரே செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பருவ நிலைகளில் வெயில் காலம் முடிந்து காற்றுக் காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் ஆனி, ஆடி, ஆவணி அடுத்த மூன்று மாதங்களும் இலையுதிர்காலம் இதில் வருகின்ற விசேஷங்களும் முக்கியமானவை.

ஆடியில் அம்மனுக்குவந்த விசேஷங்கள் வருகிறது. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய விரத தினங்கள் வரவிருக்கிறது. இன்றைய சூழலில் கொரோனா பாதிப்பினால் பலரும் பல இக்கட்டான சூழ்நிலைகளில் உள்ளனர்.

இந்த நேரத்தில் நம் மனதை குழப்பிக் கொள்ளாமல், மனம் சந்தோசமாக இருக்க முயற்சி செய்யுங்கள். தேவையில்லாமல் மற்ற விஷயங்களை நமக்குள் ஏற்றிக்கொண்டு நம் மன சந்தோசத்தை இழக்காதீர்கள். எந்த ஒரு நிகழ்ச்சியையும் மேலோட்டமாக கேட்டு ஆழ்மனதிற்குள் செலுத்த வேண்டாம்.

இதனால் உங்கள் மனம் நிச்சயமாக தெளிவாக இருக்கும். நல்ல எண்ணங்களையும் நம் வாழ்வின் முன்னேற்றங்களையும் நன்றாக இருக்க வேண்டும், என்று வேண்டுதல்களையும் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

தினமும் இறைவழிபாடு

தினமும் இறைவழிபாட்டை உங்களால் முடிந்த நேரங்களில் சிறிது நேரம் ஒதுக்கி பிரார்த்தனை செய்யுங்கள். இதுவே உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உண்டான பிரார்த்தனையாக அமையட்டும். இதுவே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

மனம் குழப்பம்

இதனால் உங்கள் மனம் குழப்பம் அடையாமல் ஒரு தெளிவான மனநிலையை கொடுக்க இந்த பிரார்த்தனை உதவிகரமாக இருக்கும். எது வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவும். நம் எண்ணங்களும் நம் மனத் தெளிவும் நம்மையும் பிறரையும் வாழ வைப்பதாக இருக்க வேண்டும். இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *