Increase Money tips : பணவரவு அதிகரிக்க குபேர தீபம் ஏற்றும் முறை
நாம் அனைவருக்கும் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் திடீரென ஏதாவது ஒரு செலவு வந்து விடுகிறது மாதம் வரவிற்கு நேரில் செலவு தன் ஆகிறது வீட்டில் பணம் இருப்பதில்லை என்று பலரும் சிந்தித்து வேதனைப்படுவர். திடீரென ஏதாவது ஒரு மருத்துவ செலவு வந்தாலும் கூட அதற்கு என்று தனி சேமிப்பு இல்லை. மருத்துவ செலவிற்கு கூட கடன் தான் வாங்க வேண்டி உள்ளது என்று நம்மில் பல பேரும் யோசிப்போம்.
என்னதான் நாம் சம்பாதித்தாலும் அந்த பணம் வீட்டில் தங்குவதற்கு நம் வீட்டில் நேர்மறையான சக்திகள் இருக்க வேண்டும். மேலும் குபேரரின் அருள் பரிபூரணமாக கிடைத்தால் பணவரவை அதிகரிப்பதுடன் தேவையற்ற விரய செலவுகளை குறைத்து எதிர்கால சேமிப்பு காண வழிமுறை கிடைக்கும்.
பணவரவை அதிகரிக்கும் குபேர பூஜை
குபேரருக்கு உரிய நாள் வியாழக்கிழமை ஆகும் எனவே ஒவ்வொரு வியாழக்கிழமைகளும் உங்களது பூஜை அறையில் சுத்தம் செய்து மாலை நேரத்தில் குபேரர் மண் விளக்கு தீபம் ஏற்றி வர பணவரவு அதிகரிக்கும்.
குபேர விளக்கு ஏற்றும் முறை
முதலில் உங்களது பூஜை அறையில் சுத்தம் செய்த பின்பு ஒரு மண் விளக்கை எடுத்து அதில் சந்தனம் எதுவும் வைத்து கொள்ளவும். பின்பு மண் விளக்கு வைப்பதற்கு ஒரு சிறிய தட்டை எடுத்து அதில் மஞ்சள் தடவி அலங்கரித்துக் கொள்ளவும். பின்பு அந்த தட்டை இரண்டு ஏலக்காய், ஒரு நாணயம் வைத்து அதன் மேல் மண் தீபத்தை வைத்துக் கொள்ளவும். குபேர விளக்கு நல்லெண்ணையில் ஏற்றுவது மிகுந்த சிறப்பு ஆகும்.
மேலும் வீட்டில் பணவரவை அதிகரிக்க மஞ்சள் நிற திரியில் குபேர தீபம் ஏற்ற வேண்டும். குபேரருக்கு பிடித்த நெய்வேத்தியம் இனிப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை வைத்து தீபாரதனை காட்டி வழிபட்டு வர வேண்டும். இதேபோல் தொடர்ந்து வியாழக்கிழமை தோறும் குபேர தீபம் ஏற்றி வழிபட்டு வர உங்கள் வீட்டில் பண வரவு தானாக அதிகரிக்கும்.மேலும் தேவையற்ற விரய செலவுகள் குறைந்து எதிர்கால தேவைகளுக்கு சேமிப்பு அதிகரிக்கும்.