ஆஸ்கார் இயக்குனர் இயக்கும் ‘தி லயன் கிங்’ அடுத்த பாகம்
கடந்த ஆண்டு வெளியான ‘தி லயன் கிங்’ படத்தை ஜான் பெவ்ரோ இயக்கினார். 1994 ஆம் ஆண்டு கார்ட்டூன் படமாக வெளியான ‘தி லயன் கிங்’ படம் 90கிட்ஸ் திரைப்படங்களில் ஒன்று. பல்வேறு தொழில்நுட்பத்துடன் மீண்டும் எடுத்து கடந்த ஆண்டு வெளியிட்டது.
முஃபாஸா, அதன் மகன் சிம்பா, முஃபாஷாவின் சகோதரன் ஸ்கார், உள்ளிட்ட சிங்கங்களின் கதாபாத்திரங்கள் மறக்கவே முடியாத ஒன்று. இதைப் பற்றி பாரி ஜெக்கின்ஸ் பேசும் போது, “நான் தி லயன் கிங் கதாபாத்திரங்களுடன் தான் வளர்ந்தேன்.

அன்பு மற்றும் நட்பு, மரபு ஆகியவற்றை சொல்லும் இந்த அற்புதமான கதையை விரிவு படுத்துவதில் டிஸ்னி உடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெறுவதுடன் ஆப்பிரிக்க புலம்பெயர்தோருக்குள் உள்ள நாட்டு மக்களின் வாழ்க்கையையும், ஆன்மாவையும் விவரிக்கும் எனது பணியை மேலும் விரிவு படுத்துவது என்பது ஒரு கனவு நனவாகும்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : தென்னிந்திய லதா மங்கேஷ்கர் பி.சுசீலா 83வது பிறந்ததினம்!

கடந்த 2019ஆம் ஆண்டு டிஸ்னி தயாரித்த ரிலையன்ஸின் பெரும் வசூலைக் குவித்தது. தமிழிலும் வெளியாகி வெற்றி அடைந்தன. இதன் அடுத்த பாகத்தின் கதை தயாரிப்பு பணிகளில் தற்போது பேரி ஜெக்கின்ஸ் ஈடுபட்டு வருகிறார் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ‘தி லயன் கிங் படத்தின்’ அடுத்த பாகத்தை ஆஸ்கார் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : வாத்தி படத்தில் வா வாத்தி பாடல் வரிகள்