ஆன்மிகம்ஆலோசனை

பயன் தரும் மாசி மாதம் கடைசி சுப முகூர்த்தம்…

சோபகிருது வருடம் 2024 , மாசி மாதம் 25 ஆம் தேதியான இன்று மாசி மாதத்தில் வரும் கடைசி சுபமுகூர்த்த தினம் ஆகும்.

இன்று சுபமுகூர்த்த தினம் மாசி மாதம் கடைசி சுபமுகூர்த்த தினம் என்று பஞ்சாங்கம் சொல்கின்றது.இந்த நாளில் எதெற்கெல்லாம் சிறப்பு, என்ன செய்தால் நன்மை என பார்க்கலாம் .

வீட்டு புனியாச்சலம் நடத்துவார்கள் மற்றும் திருவோண விரதமும் சேர்ந்து வருவதால் நன்னாளாக மக்கள் கருதி அவர்கள் வீட்டு முக்கிய நல்ல செயல்களை நடத்துவார்கள்.

மாசி மாதம் என்றாலே திருமணம் ,காதுகுத்து ,புதுமனை புகுவிழா மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு அத்துடன் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முக்கியமாக கொண்டாடப்படுகின்றது.

மாசி மாதம் இறுதி சுப முகூர்த்தம் என்பதால் இன்று முக்கிய நல்ல காரியங்கள் அனைத்தும் இன்றுடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். காலை 10
30 மணி முதல் நல்ல நேரம் தொடங்குகின்றது.

மாசி மாதம் சுபமுகூர்த்த தினம் என்பதால் இன்றைய திருமணங்கள் மற்றும் விருந்து விழாக்கள் முக்கிய பங்கு பெறுகின்றன.

கோவில் வழிபாடுகளில் பெருமாளுக்கு இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றது மேலும் உள்ளூர் கோவில்களில் விசேஷம் நடத்த முக்கியமான நாளாக இன்றைய சுப முகூர்த்த தினம் கடைபிடிக்கப்படுகின்றது.

சுப முகூர்த்த தினங்களில் மக்கள் தங்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள் மற்றும் தாங்கள் சார்ந்த சமுதாயத்தில் கோவில்களில் நடக்கும் முக்கிய வழிபாடுகளில் பங்கு பெறுவதற்கு உகந்த நாளாக இன்று கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *