Tips for increase eye power: இனி கண்ணாடிக்கு வேலை இல்லை; கண் பார்வையை அதிகரிக்கும் அற்புதமான உலர் பழங்கள்
ஒரு மனிதன் இந்த உலகை பார்த்து ரசிக்க கடவுள் நமக்காக கொடுத்த அற்புதமான பொக்கிஷம் கண். மனிதனுக்கு கண் பார்வை என்பது மற்ற அனைத்தையும் விட அவனுக்கு இன்றியமையாத தேவையாக அமைகிறது. உலகின் இயற்கை அழகை ரசிப்பதற்கும் உங்களின் அன்புக்குரியவர்களின் முகத்தை பார்த்து ரசிக்கவும் புத்தகங்கள் படிக்கவும் என அனைத்திற்கும் கண் பார்வை அவசியம் ஆகிறது. நமக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷத்தை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் கண்பார்வை ஏற்படாமல் தவிர்க்கவும் கண் பார்வை குறைபாட்டை நீக்கி மீண்டும் பிரகாசமான கண் பார்வைக்கு வழிவகுக்கும் தேடல்களை நாம் தான் தேடி போக வேண்டும். ஆரோக்கிய உணவுகள் உட்கொள்வது, சன்கிளாஸ், கண் பார்வையை அதிகரிக்கும் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது என நமது கண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கண்பார்வையை அதிகரித்து கண்களை பத்திரமாக நாம் பார்த்துக் கொள்ள உதவும் ஒரு சில உணவுகளை பார்க்கலாம்.
வால்நட் ( walnut)

ஆரோக்கியமான கண்களுக்கு அற்புத உணவாக வால்நட் உள்ளது வால்நட்ஸில் ஒமேகா-3 அதிகம் காணப்படுவதால் எது பிரகாசமான கண் பார்வைக்கு உதவியாக உள்ளது.
உலர் திராட்சை

உலர் திராட்சை தினமும் எடுத்துக் கொள்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு சரியான உணவாகும். உலர் திராட்சையில் பாலிபினால்கள் உள்ளதால் கண்களின் செல்களை ஃப்ரீ ரேடிக்கலில் இருந்து காக்க உதவுகிறது.
ஆப்ரிகாட்

ஆப்பிரிக்கா பழத்தில் விட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்து காணப்படுவதால் இதனை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் கண் பார்வைக்கும் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் அரிய உணவாக இருக்கும்.
முந்திரி

முந்திரியில் ஜீயாக்சாந்தின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளதால் கண் பார்வையை அதிகரிக்கவும் கண்ணில் ஏற்படும் நோய்களை எதிர்க்கும் காரணியாகவும் உள்ளது.
பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ,பி6, ஈ மற்றும் இரும்பு கால்சியம் கந்தகம் பொட்டாசியம் புரதங்கள் என அனைத்து சத்துகளும் நிறைந்து காணப்படும் பழமாக இருப்பதால் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து காணப்படுவதால் கண்களின் செல்களுக்கு ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல்களை தடுக்க உதவுகிறது. மேலும் கண் பார்வை பிரகாசமாக தெரிய உதவுகிறது.
மேற்கண்ட உலர் பழங்களை அடிக்கடி எடுத்து வர கண்ணாடி அணிவதற்கான அவசியமே இனி இருக்காது. என்றும் இளமையுடனும் பிரகாசம் வீசும் கண்களுடனும் காணப்படுவீர்கள்.