பாட்டு சிகரம் எஸ்பிபி இறைவனடி சேர்ந்தார்!..
எல்லோருடைய இதயத்திற்கும் இவர் நெருங்கிய மனிதர் பாகுபாடுகள் பல கடந்து பல உள்ளங்களை ஆண்ட மனிதர் நமது பாடும் நிலா எஸ்பிபி அவர்கள் இறைவனடி சேர்ந்தார். குரலிலே ஒரு தெளிவு அகரம் இப்போ சிகரம் நோக்கி பறந்து கொண்டிருக்கின்றது. நம்மை கனத்த இதயத்துடன் இழுத்துச் சென்று விட்டது.
உயிர் காக்கும் கருவிமூலம் சிகிச்சையில் இருந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரப்பிணியம் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. எஸ்பிபி அவர்கள் ஆந்திர மாநிலத்தில் கொண்டால் அம்மாபேட்டையில் பிறந்தவர். ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருக்கின்றார். இவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் நமது வாழ்வில் நீங்கா இடம் கொண்டதாக இருக்கும். தன்னுடைய பாட்டால் கோடிக்கணக்கான இதயத்தால் ஆண்டுக் கொண்டிருந்தவர். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
எஸ்பிபி பாட்டை நம்மை ஆளும். எஸ்பிபி அவர்களின் ஆத்மா நம்மை ஆசிர்வதிக்கும் அவரது பாடல் நம்மை ஆட்டுவிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எஸ்பிபி பாடகராகவும் இருந்திருக்கிறார். நடிகராகவும் நடித்துள்ளார், இயக்குனராகவும் இருந்திருக்கின்றார். 1966 முதல் 2020 வரை இந்திய சினிமாவில் சரித்திரம் படைத்தவர்.
நமது பாலசுப்பிரமணியம் அவர்கள் டப்பிங் நடிகராகவும் இருந்திருக்கிறார். தெலுங்குப் படத்தில் கமலுக்கு டப்பிங் எஸ்பிபி கொடுத்துக்கொண்டிருந்தார். தமிழ், தெலுகு, கன்னடம், ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கின்றார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் 16 இந்திய மொழிகளில் பாடி இருக்கின்றார்.
பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் பல தேசிய விருதுகள் பெற்று வந்திருக்கின்றன. ஆந்திரப் பிரதேச அரசின் 25 மாநில நந்தி விருதுகள் பெற்று இருக்கின்றார். தமிழ் மற்றும் கர்நாடக அரசின் மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார், மற்றும் விளம்பர விருதுகளும் பெற்றிருக்கின்றார். இவர் 2012 ஆம் ஆண்டு என்.டி.ஆர் தேசிய விருது பெற்றிருக்கின்றார்.
2001 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருது கொடுத்தது. 2011ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றார். செப்டம்பர் 25 இன்று நம்மையெல்லாம் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்திவிட்டு பாடும் நிலா நம்மை விட்டுத் தூரம் சென்றுவிட்டது. ஆனால் அவருடைய பாட்டு நம்மை எப்போதும் ஆட்டுவிக்கும் 50 வருடங்களுக்கு மேலாகச் சினிமா திரையுலகில் தன்னை ஒரு பாட்டுச் சிகரமாக மக்கள் மனதில் நிறுத்தி விளங்கியவர்.
திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்,
சத்தமில்லாத தனிமை கேட்டேன்,
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்.
என்ற பாடலை மூச்சு விடாமல் பாடியிருக்கின்றார். மண்ணில் இந்தக் காதல் என்றும் பாடல் எப்போது கேட்டாலும் எல்லோருக்கும் இனிக்கும்.
கல்யாண மாலை படாத திருமண பெண்கள் இருக்கமாட்டார்கள். திகட்டாத இவரது குரல் இசை இன்று நம்மைத் திடீரென்று விட்டுச் சென்று விட்டது. மறைந்த ஆத்மாவுக்கு சாந்தியடைய வேண்டுவோம். வணக்கங்களுடன் நன்றி கூறி வழியனுப்பி வைப்போம். அவர் பாடல் நம்மைப் பல இடங்களில் தேடி கொடுத்திருக்கின்றது. அவரது நிலைத்தப் பாடலுக்கு நன்றிகள் பல என்றும் சொல்வோம்.