3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்த மகாமனிதன் சோனுசூட்
யாருப்பா இந்த மனுஷன் சோனு சூட் இந்தியா முழுக்க இந்த கொரோனா காலத்தில் வாழும் தெய்வமாக இருப்பவர் என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமாகாரங்க தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது தப்பு, உண்மைதாங்க ஒத்துக்குறேன். ஆனால் தான் சேர்ந்த சினிமாவை விட சிறப்பாகச் செயல்படுவது. ஒரு மனுஷனா இந்த மாபெரும் மனுஷன் சோனு சூட் இப்ப நம்ம பாராட்டினாலும் எப்பவுமே பாராட்ட முடியாதுங்க. கொரோனா ஆட்டம் தொடங்கிய காலம் முதல் இப்ப வரைக்கும் சோனு சூட் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் மக்களுக்குச் செய்து வருகிறார்.
வேலைக்காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டுவர அவர்களுக்கான வேலைவாய்ப்பு ஆப் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். தலைவர் இதற்கு முன்பு புலம்பெயர்ந்த மும்பையில் வாழும் மற்ற மாநில தொழிலாளர்கள் குறைவு காரணமாக வீட்டுக்கு செல்லத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து இந்த மனிதன் தீயாக வேலை செய்து கொண்டிருக்கின்றார். தன்னை உலகமே புகழ்கின்றது ஆனால் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் தன்னடக்கத்துடன் இந்த பணியைச் செய்து கொண்டிருக்கின்றார்.
வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீடுவரை கொண்டு சேர்த்தார். கொரோனா காலத்தில் வீதியில் நின்ற பல குடும்பங்களுக்கு வாழ்வாதார சூழலை உருவாக்கித் தந்தார். குழுவாகச் செயல்பட்டு உதவி கரம் நீட்டினார் தொலைபேசிகள் மூலமாக உதவி கேட்ட பல மக்களுக்கு ஹெல்ப் லைன் மூலம் உதவி செய்தார்.
வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்கள் அனைத்திலும் அவரது பணியானது பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது. படிக்க வேண்டிய குழந்தைகளுக்கு அவர்களது வாழ்வாதார உதவியைச் செய்து கொடுத்தார். அவர்களது குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதியைச் செய்து கொடுக்க இந்தியா முழுக்க வேலையில் இருந்த மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர இந்த மனிதன் மாபெரும் அளவில் குழுவை உருவாக்கி அந்தக் குழுவிற்கு வேலை வாங்கிக் கொடுப்பது, தனது பணியாக டார்கெட் வைத்து அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார் சோனு சூட்.
உண்மையிலே மனிதம் இவர் மாபெரும் தான் பிறந்த நாளை எப்படி எல்லாம் கொண்டாடி இருக்கலாம் ஆனால் இந்த மனிதன் தன் பிறந்த தினத்தை 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் இலக்கை நிர்ணயித்து அவர்களுக்காக செய்து இருக்கின்றார் என்றால் உண்மையில் மெய் சிலிர்க்கின்றது.
நாமெல்லாம் சமூக ஊடகங்களில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ஆனால் சோனுசூட் மனிதன் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கின்றார். இவருடைய நற்க் காரியத்தை இந்தியா முழுவதும் பாராட்டி இருக்கின்றது. இவருடன் இணைந்து பணியாற்றப் பல தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்களுடன் ஒருங்கிணைந்து தேவைப்படுபவர்களுக்கு தேவைப்படும் உதவியைச் செய்து வருகின்றார்.
சோனு சூட் உண்மையில் இவர் மனிதரல்ல மாமனிதர் இவருக்கு இந்தியாவின் சார்பாகச் சிலேட்டு குச்சி தலைவணங்கி நன்றி கூறுகின்றது. இனம், மதம், மொழி வன்முறையென பல செயல்களால் இந்த கொரோனா காலம் நம்மை மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது. அதையெல்லாம் தாண்டி ஒரு மனிதன் லட்சக்கணக்கான மனிதத்தை காப்பாற்றினார். அவரை இருகரம் கூப்பி தலை வணங்கி நன்றி செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.
இந்திய அரசு அவருக்குரிய கவுரவத்தை நிச்சயம் கொடுக்கும் மோடிக்கு இது சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை அவரும் இதை உற்றுநோக்கி கொண்டிருப்பார் என்று நமக்கெல்லாம் தெரியும். இவ்வளவு உதவி செய்த இந்த மனிதருக்கு வாழ்நாளெல்லாம் மறக்கமுடியாத நன்றி கடனை இந்தியா திருப்பி செலுத்த வேண்டும். இது நமது முக்கிய பணிகளில் ஒன்றாகும் இவரது ஒரு சினிமா நடிகர் அதுவும் வில்லன் நடிகர் பிரபல கதாபாத்திரங்களில் தன்னை மிளிரச் செய்தவர். இருப்பினும் இந்த மனிதத்தை நாம் காக்க வேண்டும் நாம் மரியாதை செலுத்த வேண்டும்.
இவருக்கு நாம் செலுத்த வேண்டிய மரியாதை ஒன்று உண்டு எனில் இவரைப் போல நம்மால் இயன்ற அவர்களுக்குச் சிறிதளவேனும் உதவுவோம். இவரை வழிகாட்டியாகக் கொண்டு செயல்படுவோம். இந்தத் தேசம் தானாக வளரும் நம்மைத் தூக்கி நிறுத்த நமக்கே தெரியும் சிந்திக்கும் மனங்கள் இருந்தால் சிறிதளவேனும் சிந்திப்போம் செயலாற்றுவோம். செயலில் ஆற்றல் இருக்கும் கொண்டு தேவைப்படுவோருக்கு உதவுவோம்