முதல் கடவுள் விநாயகர்
பிள்ளையாரை வணங்கி தொடங்கும் காரியம் வெற்றியாக முடியும். அதன் பொருட்டு எந்த ஒரு தொடக்கத்தையும் பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குகிறோம். மகாபாரதத்தை நமக்கு எழுத்து வடிவில் தந்த ஞானக்கடவுள் விநாயகப் பெருமான்தான்.
கஜபதி
கஷ்டங்கள் தீர்க்கும் கஜபதி, கணங்களின் நாயகன் கஜபதி, கணங்களின் அதிபதி நம் கணபதியாவார். விநாயகரை வணங்கி, தலையில் குட்டி, காதுகளைப் பிடித்தபடி தோப்புக் கரணம் போட்டு நின்று வணங்கினால் வேண்டுவது கிடைக்கும்.
அருகம்புல் நாயகன்
விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முதன்மை பெறும். அனலாசுரன் என்ற அசுரனை விழுங்கி வயிற்றுக்குள் அனலாசுரன், மிக அதிகமாக அனலைக் கொடுக்க அந்த சூட்டைத் தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகப் பெருமான். உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல் அன்று முதல் முதன்மையிடம் விநாயகர் வழிபாட்டில் இடம் பெற்றது.
மேலும் படிக்க : துர்க்கை அம்மன் 108 போற்றி! தோஷங்களை நீக்கும்.
வெற்றி விநாயகர்
வாழ்வில் வெற்றி பெற நாம் தொடங்கும் எந்த காரியத்திலும் மழு முதல் கடவுள் அருள் பெறுதல் அவசியமாகின்றது. உங்கள் வாழ்வில் வரும் வினைகள் தீர்க்க விநாயகர் வழிபாடு அவசியம் ஆகும்.