மருத்துவம்

ஆபத்து காலத்தில் பாதிக்கப்பட்ட மனிதரைக் காக்க முதலுதவி அவசியம்!

முதலுதவி ஒரு மனிதன் ஆபத்து காலத்தில் இருக்கும் பொழுது அவனுக்கு உதவி செய்து அவனைப் பெரும் ஆபத்தில் இருந்து காத்தல் ஆகும். அவற்றில் பல வகைகள் உண்டு விபத்துக்கால முதலுதவி, இதய  பிரச்சனை உதவி போன்ற பலவுண்டு  காக்கை வலிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்ததெந்த சூழலில் எப்படி உதவுது குறித்து நாம் அறிவோம். 


காக்கை வலிப்பானது தொற்றல்ல, மூளையில் ஏற்படும் சிறு மாற்றங்களினால் உண்டாகின்றது.  காக்கை வலிப்பு ஒரு நபரின்  தசைகள் குறுகிய நிலையை அடைய சடுதியாக அசைவுற்று மல்லாக்க விழச் செய்கின்றன. இப்பாதிப்பின் போது சுயநினைவு அற்ற நிலை காணப்படும்.  உடலில் அதிர்வான அசைவுகள் தொடர்ந்து நிகழும் வாய் வழியாக உமிழ்நீர் வழியும், சிறுநீரும் கழிக்கப்படலாம். காக்கை  வலிப்புள்ளவர்கள்  கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காக்கை வலி குணமாக கூடிய ஒன்றாகும் இது தொற்றல்ல

காக்கை வலிப்பு ஏற்படுபவரை  வலி குறைந்ததும் அவருடைய தலையை பின்னால் தள்ளி வளிப்பாதையை திறக்க நாடியை மேலே தூக்கிவிடவும். பாதுகாப்பாக   அவரை படுக்க வைக்கவும். அவரை நன்கு ஓய்வு பெறச் செய்யவும். பின்பு  அவர் சகஜ நிலைக்குத் திரும்புவார்.
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் ஏற்படும் எதிர்பாரா காக்கை வலிப்பு நோயைப் போக்க விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 
கர்ப்பிணி பிந்தய மாதங்களில் வலிக்குள்ளாகலாம் அல்லது பிரசவிக்கும் அண்மையில் வலிக்குள்ளாகலாம். 
அவருக்கு  வளிப்பாதையை தடையின்றிப் பாதுகாக்கவும். 
பாதுகாப்பு நிலையில் அவரைத் திருப்பி விடவும்.
அவருக்கு பயிற்சி பெற்ற மருத்துவரின் பராமரிப்புக்கு அவரை  சேர்க்கவும்.

காய்ச்சல் காலங்களில் வலிப்பு ஏற்பட்டால்:

ஒருவருக்கு காய்ச்சல் காலத்தில் வலிப்பு ஏற்படலாம். பொதுவாகப் பிள்ளைகளுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. 
நாடியை தூக்கிப் வளிப்பாதையை திறக்கவும். 
பிள்ளையை பாதுகாப்பு நிலையில் வைக்கவும். 
ஆடைகள் களைந்து நீரால் தேகத்தை துடைக்கவும். 
வலிப்பு ஏற்பட்டு  விழுந்து பின் பூரணமாக விழித்து சுயநினைவைப் பெற்றதும் குடிக்க தாராளமாக நீர் கொடுக்கவும். 

காய்ச்சல் குணமாக தேவையான அடிப்படை சிகிச்சை

காய்ச்சல் குணமாக தேவையான அடிப்படை சிகிச்சையாக உடல் வெல்ல நிலையை குறைக்க வெள்ளை துணியை நீரில் நனைத்து நன்கு பிழிந்து நெற்றியில் வைத்து ஓய்வு எடுக்க வைக்கவும். நன்கு பிழிந்த ஈரத்துணியை உடலில் ஒத்தியெடுத்து உடலில் உள்ள வெப்ப நிலையை குறைக்க உதவும். 

குழந்தைகளுக்கு காய்ச்சல் காலங்களில் நீராகரம் நன்கு கொடுக்கலாம். 
பெண்கள் கருவுற்றிருக்கும் முதற்கால கட்டத்தில் ரத்த அழுத்தம் சீராக வைத்திருக்க பரிசோதனை செய்து பாதுகாக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *