Famous biriyani in covai: பிரியாணி பிரியர்களுக்கு; ஃபேமஸ் காலித் பிரியாணி நம்ம ஊரு கோவையில்
இன்று அனைவரும் உணவை தேடி தேடி உண்ணும் பழக்கத்தை ஒரு வாடிக்கையாக வைத்துள்ளனர்.அதிலும் பிரியாணி பிரியர்கள் என்றே ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் எந்த நேரத்திலும் பிரியாணியை சாப்பிடும் மனப்போக்கிற்கு வந்து விட்டனர். மிட்நைட் பிரியாணி என நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது, ஏதாவது பார்ட்டி என்றால் பிரியாணி , சந்தோஷமாக இருந்தால் பிரியாணி, சோகமாக இருந்தால் பிரியாணி என பிரியாணிக்கு என்றே தனி கூட்டம் உள்ளது. பேமஸான கடைகளும் பல உண்டு, அதிலும் மிகப் பிரபலமான காலித் பிரியாணி இதுவரை சென்னையில் இயங்கி வந்தது. தற்போது தனது கிளையை நம்ம ஒரு கோவையில் துவங்க உள்ளது.

சென்னையில் மிகவும் பிரபலமான காலித் பிரியாணி உணவகம் தனது 30 வது கிளையை இன்று கோவை சாய்பாபா காலனி பகுதியில் துவக்கியது இதனை பிரபல யூடியூபர் இர்பான் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்
சென்னை வாழ் மக்களின் அசைவ உணவுகளில் தனி இடம் பிடித்து, நன்மதிப்பை பெற்றுள்ள காலித் பிரியாணி தனது 30வது கிளையை கோவை சாய்பாபா காலனி பகுதியில் துவங்கியது. இதனை பிரபல யூடியூபர் இர்பான் ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றி வைத்தும் துவக்கி வைத்தார்.துவக்க விழா சலுகையாக வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி வாங்கினால் 1 பிரியாணி இலவசம் என்று தனது விற்பனையை துவங்கியது.

நீண்ட வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப பிரியாணிகளை வாங்கி சென்றனர். மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இர்பான் கூறும் பொழுது கோவை சாய்பாபா காலனி பகுதியில் காலித் பிரியாணி தனது 30வது கிளையை துவங்கியுள்ளது. முழுக்க முழுக்க பாஸ்மதி அரிசியில் தயாராகும் இவர்களது பிரியாணி, சர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்கும். இதனால் அனைவருக்கும் ஏற்ற உணவாக இந்ந வகை பிரியாணி உள்ளது என்றார்.
