சினிமாசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

காதலருடன் இரண்டாவது திருமணம்; நடிகை அமலா பாலின் அனல்பறக்கும் மேரேஜ் போட்டோஸ்

தமிழ் திரையுலகுக்கு மைனா திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானவர் அமலாபால் அதன் பின்பு இவர் திருட்டு பயலே 2 ,முப்பொழுதும் உன் கற்பனைகள், சேட்டை, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் அடுத்தடுத்த நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி கொண்டவர். ரசிகர்கள் எண்ணிக்கையும் இவருக்கு ஏராளமாக இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆகி இரண்டு வருடங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பாடகர் பவீந்தர் சிங் என்பவர் உடன் அமலா பாலுக்கு காதலும் அவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர் என வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. பாடகர் பவிந்தர் சிங்கிற்கும் அமலா பாலுக்கும் திருமணம் நடைபெற்றது போல் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சில மணி நேரத்திலேயே அதனை டெலிட் செய்து விட்டார்.

பாடகர் பவிந்தர் சிங்கிற்கும் அமலாபாலுக்கும் திருமணம் நடைபெற்றதா என்ற குழப்பத்தில் இருந்து ரசிகர்கள் வெளிவராத நிலையில் சில நாட்களுக்கு முன் தனது பிறந்த நாளில் ஜெகத் தேசாய் என்பவருடன் காதலுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டனர். அமலா பாலின் பிறந்தநாள் விழாவில் ஜெகத் தேசாய் அழகிய நடனமாடி அமலாபாலின் கையில் மோதிரம் அணிவித்து பிறந்தநாள் பரிசாக தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு அமலாபாலம் அவரது காதலை கட்டியணைத்து முத்தமிட்டு வெளிப்படுத்தினார் எனது ஜிப்சி குயின் ஓகே சொல்லிவிட்டார் என ஜெகத் தேசாய் இன்ஸ்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் நவம்பர் 5 ஆம் தேதி அமலா பால் ஜெகத் தேசாய் ஆகிய இருவரும் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வரும் திருமண போட்டோவாக உள்ளது.

ஜெகத் தேசாய் தனது இன்ஸ்டா பக்கத்தில்,

இரண்டு ஆன்மாக்கள் ஒரு விதி எனது தெய்வீக பெண்ணுடன் கைகோர்த்து நடப்பது, இந்த வாழ்நாள் முழுவதும்

என எழுதி தனது திருமண புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும்

“பிடித்ததும் ரசித்ததும் நினைத்ததும் கிடைத்ததிங்கே உன்னால்” என பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *