செய்திகள்

உலகில் அதிகமான கார்களை விற்ற நிறுவனம்..!

உலகளவில் சென்ற ஆண்டு அதிக கார்களை டொயோட்டா நிறுவனம் விற்று சாதனை படைத்துள்ளது.

ஜப்பானியக் கார் நிறுவனமான டொயோட்டா, 2021ஆம் ஆண்டு மொத்தம் 10.5 மில்லியன் வாகனங்களை விற்றுள்ளது. அதன் துணை நிறுவனங்களின் விற்பனையும் அதில் அடங்கும். அதன் வாகன விற்பனை 10.1 விழுக்காடு அதிகரித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் நிறுவனம் தொடர்ந்து ஈராண்டுகளாக உலகின் முதல் நிலை வாகன விற்பனையாளராகத் தொடர முடிந்தது.

அதற்கடுத்த இடத்தில் வோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் உள்ளது. 2021ஆம் ஆண்டு வோக்ஸ்வேகன் விற்ற வாகனங்களின் எண்ணிக்கை – 8.9 மில்லியன். கடந்த பத்தாண்டுகளில் நிறுவனம் விற்ற ஆகக் குறைவான வாகன எண்ணிக்கை அது. பல வாகன நிறுவனங்கள், Semiconductors எனப்படும் பகுதி மின் கடத்திகளின் பற்றாக்குறையால், வாகனத் தயாரிப்பைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயின. இருப்பினும் டொயோட்டா நிறுவனத்தின் ஜப்பானிய, ஆசிய விற்பனை அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *