மருத்துவம்

வெற்றிலை வெறும் இலை இல்லை, வேதம் முதல் ஆயுர்வேதம் வரை வெற்றிலை!..

பழங்காலத்தில் உடல், மனதை  ஆரோக்கியமாக வைக்க பல்வேறு யுக்திகளை நம் ம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.  முன்னோர்கள்  எதை செய்தாலும் அதில் கண்டிப்பாக ஆயிரம் நன்மைகள் இருக்கும். நம் முன்னோர்கள் மிக கொடிய நோய் நொடிகள் எதுவுமின்றி வாழ காரணம். அவர்களது உணவு மற்றும் உபயோகிக்க  உடல் பயிற்சிகள் பயன்படுத்தி வந்தனர். மனம் மற்றும் உடலை ஆரோக்கியமாக பயன்படுத்தி வந்தனர். 
வெற்றிலை வெறும் இலை மட்டும் இல்லை. அது வேதம் முதல் ஆயுர்வேதம் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நமது நாட்டின் பாரம்பரியத்தில் வெற்றிலை சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது.

வெற்றிலையின் பயன் என்ன, ஏன் வெற்றிலையை உணவுக்குப் பின் பயன்படுத்தி வந்தனர். வெற்றிலை  மென்னும் பழக்கம் முன்னோர்களிடையே ஆண்டாண்டுகள் பங்கேற்க வேண்டும். வெற்றிலை போட்ட பாட்டிகள் பாட்டன்கள் 70 வயதை தாண்டியும் பற்கள் உறுதியாக இருந்தது. கண் நன்றாக தெரிந்தது, ஜீரண மண்டலம் சரியாக இயங்கியது. உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்து வந்தன. இன்று நாம் ஜீரண மண்டலம்  சீர்கெட்டு கிடக்கின்றதுடன், வெற்றிலை போடுவது தவறென்று கூறப்படுகின்றது.

வாயு தொல்லை நீங்க

வாயு தொல்லை நீங்க  வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக விளங்கிருக்கிறது. நமது உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயு தொல்லை போன்றவை ஏற்படுகின்றது. இதனைப் போக்க வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்புடன் மென்று வர  உடலில் வாயு ஒழுங்குபடுகின்றது.  சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனை இவை இரண்டும் சரியாக ஒன்று அல்லது இரண்டு வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் வாட்டி, வயிற்றி வைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு 10 நிமிடங்கள் வரை செய்து வர வாயு தொல்லை நீங்கும்.

வெற்றிலை  பசி இன்மை நீங்க அருமருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிலருக்கு பசி அதிகம் எடுக்காமல் இருக்கும் அப்படிப்பட்டவர்கள். ஒரு வெற்றிலையை எடுத்து அதனுடன் சிறிதளவு பாக்கு மற்றும் சுண்ணாம்பு தடவி சாப்பிடுவதினால் பசி இன்மை நீங்கும். பின்பு பசி அதிகம் எடுக்க ஆரம்பிக்கும்.

வெற்றிலையை கொண்டு அடிபட்ட காயத்தை இயற்கையாக குணப்படுத்தும் முறையை முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். உடலில் ஏற்படும் வெட்டு காயம், அடிபட்ட காயம், புண் போன்றவை உடனே ஆற சிறிதளவு வெற்றிலையை எடுத்து அரைத்து. அவற்றை காயங்கள் மீது பூசுவதினால் காயங்கள் மிக விரைவில் ஆற ஆரம்பிக்கும். 

தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வெற்றிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில்  கலந்து தடவி வர  தோல் பிரச்சனையை சரிசெய்யும்.


சிறுநீரக பிரச்சனை சரியாக:

முதியவர்கள் மற்றும் சிறுநீரக உறுப்புகளில் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சற்று பிரச்சனை ஏற்படும். அப்படி பட்டவரகள் தினமும் வெற்றிலை சாற்றினை பருகி வரலாம்.

சிறுநீர் சம்மந்த உறுப்புகளில் இருக்கும் நச்சுக்கள் நீங்கும். சிறுநீர் அதிக அளவு பெருகி சீரான கால இடைவேளையில் சிறுநீர் கழிக்க செய்து உடல் நலத்தை மேம்படுத்த செய்கின்றது இந்த வெற்றிலை.

வெற்றிலையை கொண்டு வாய் புண் குணமாக, வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சனை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.

டென்ஷனால் ஏற்படும் ஒரு 10 வெற்றிலையை எடுத்து கொள்ளுங்கள். அவற்றை மைபோல் அரைத்து நெற்றியில் பற்றுபோடுங்கள். பி 1/2 மணி நேரமாவது நன்றாக உறங்குங்கள். இவ்வாறு செய்வதினால் தலைவலி தானாகவே சரியாகிவிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *