Body Healthy tips: வெறும் ஐந்தே நிமிடம் இதை செய்தால் போதும்;சாகும் வரை நோய்கள் கிட்டவே வராது
நம் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் அனைவரும் விரும்புகிறோம். ஆரோக்கிய உடலுக்காக எதை எதையோ தேடி அலைகிறோம். ஆனால் அவை அனைத்தும் நமக்கு பலனளிப்பதில்லை. அதுவும் இன்றைய காலகட்டத்தில் வேலைக்காக தேடி தேடி அலைவதே அதிகமாகி விட்டது இவ்வாறு இருக்கையில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நான் மறந்து விடுகிறோம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதால் மட்டும் நமது உடல் சரியான சுறுசுறுப்புடன் இருப்பதில்லை.
உணவுடன் சேர்த்து உடற்பயிற்சியும் மிக முக்கியம் ஒரு மனிதன் தினமும் உடற்பயிற்சி செய்கிறான் என்றால் அவனது உடலும் உள்ளமும் சீராக வலிமை செய்ததாக உள்ளது என்று அர்த்தம். நாம் எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ்வதற்கு தேவையான உடற்பயிற்சி என்னவென்று பார்க்கலாம்.. நிமிடம் போதும் நாம் வாழ்நாள் முழுவதும் நோய் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தாரக மந்திரமாக இந்த உடற்பயிற்சி உங்களுக்கு இருக்கும்.
வாழ்நாள் மகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி
நீங்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும். எனவே அதிகாலையில் எழுந்தவுடன் இந்த பயிற்சியை செய்வது உங்களுக்கு அதிக நன்மையை தரும். அதிகாலையில் ஒரு சுவற்றின் அருகில் தரையில் ஒரு துணியை விரித்துக் கொள்ளுங்கள். பின்பு சுவரைப் பார்த்தது போல சுவருக்கு எதிர்திசையில் கால்களை நேராக உயர்த்தி மேற்பரப்பில் சமமாக வைக்க வேண்டும். அதாவது உங்களின் உடல் பார்பதற்கு ” L ” வடிவில் சரியாக 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும். இதே நிலையில் நீங்கள் 5 நிமிடம் இருக்க வேண்டும்.
பயன்கள்
கால்களை உயர்த்தி நீங்கள் உடற்பயிற்சி செய்வதால் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் அழுத்தம் சீராகும்.
குடல்களில் ஏதேனும் அடைப்பு இருந்தால் நீங்கள் காலை உயர்த்தி வைப்பதால் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட உதவும்.
இதயத்துடிப்பை சீர்படுத்தி இதயத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இரத்த ஓட்டம் இதயத்திற்கு சீராக செல்ல உதவுகிறது.
உடற்பயிற்சி செய்யும் பொழுது இரத்தம் சீராக பாய்வதால் கால்களில் ஏதேனும் வீக்கம் இருந்தால் வீக்கத்தை குறைத்து வலி இல்லாமல் இருக்க உதவும்.
உடலை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவும் .உடல் சோர்வு நீங்கி என்றும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.
எனவே தினமும் இந்த உடற்பயிற்சியை 5 நிமிடம் ஒதுக்கி செய்து வர எந்த வித நோய்நொடிகளும் இல்லாமல் என்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பது போல நீங்கள் தினமும் சுவரைப் பயன்படுத்தி செய்யும் இந்த உடற்பயிற்சியால் உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.