சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ஏழைகளின் ஆப்பிள்..!!

தக்காளியில் விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. விலை குறைவாக இருக்கும் நேரத்தில் தக்காளியை வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்து கொடுக்கலாம். தக்காளி குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள் : கால் கிலோ தக்காளி, மிளகாய் வற்றல் 5, சீரகம் 2 தேக்கரண்டி, தேங்காய் இரண்டு துண்டு, எண்ணெய் 50 மில்லி,கடுகு அரை டீஸ்பூன், வெள்ளை உளுந்து அரை ஸ்பூன், வெந்தயம் கால் ஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் 2, மஞ்சள் பொடி, உப்பு, கறிவேப்பிலை தேவையான அளவு.

செய்முறை : நன்றாக பழுத்த தக்காளிப் பழங்களை நன்றாகக் கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிளகாய் வற்றல் சீரகம் தேங்காய் ஆகியவற்றை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் காய வைத்து, பின்பு கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் போட்டு சிவக்க வறுத்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

நீரை ஊற்றி கரைத்து அதில் ஊற்றுங்கள் தேவையான உப்பு, மஞ்சள் பொடி போட்டு குழம்பு நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். இதை இட்லியுடன், சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம். சுவையான தக்காளி குழம்பு தயார்.

பொதுவாகப் பார்க்கும் போது ஆப்பிளில் நமக்கு கிடைக்கும். உணவுச் சத்தை விட சற்று அதிகமாகவே தக்காளியில் கிடைக்கிறது. ஒரு சில காலங்களில் மட்டுமே கிடைக்கும். அது போலவே விலையும் அதிகமாக உள்ளது. தக்காளி எல்லா காலங்களிலும் குறைந்த விலையிலும் கிடைக்கிறது.

எல்லோராலும் விரும்பி வாங்கி உணவுடன் கலந்து கொள்ள உதவுகிறது. தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கிறார்கள். இது உண்மையில் மிகவும் பொருத்தமே. தக்காளி பழத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதால் அது சத்து பொருட்கள் வீணாகாமல் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *