சினிமா பாடல்கள்

தவசி படம் பாடல் வரிகள் தந்தன, தந்தன, தை மாசம்,….

தவசி 2001ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை உதய சங்கர் இயக்கியிருந்தார். விஜயகாந்த், சௌந்தர்யா, ஜெயசுதா,நாசர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இரு விழி, இரு விழி,
இமை கொட்டி அழைக்குது,
உயிர் தட்டி திறக்குது,
ரெக்க கெட்டி பறக்குதுமா,
ரெக்க கெட்டி பறக்குதுமா,

இரு மனம், இரு மனம்,
விட்டு விட்டு துடிக்குது,
விண்ணை தொட்டு மிதக்குது,
வெக்கம் விட்டு இணைந்ததம்மா,

தந்தன, தந்தன, தை மாசம்,
அது தந்தது தந்தது உன்னதான்,

சந்தன, சந்தன, மல்லி வாசம்,
தேன் சிந்துது சிந்துது இப்பதான்,

என்னது என்னது, இந்த நாணம்?
மெல்ல கொல்லுது கொல்லுது எனத்தான்,

மேலும் படிக்க : விஜையின் ரஞ்சிதமே ரஞ்சிதமே வரிகள்

தொட்டது தொட்டது, இப்ப போதும்,
அட மத்தது மத்தது எப்பதான்,

ஆத்தாடி, ஆத்தாடி,
என் நெஞ்சில் காத்தாடி,

ஐயா, உன் முகம் பார்க்க,
என் கண்ணே கண்ணாடி,

தந்தன, தந்தன, தை மாசம்,
அது தந்தது தந்தது உன்னதான்,

சந்தன, சந்தன, மல்லி வாசம்,
தேன் சிந்துது சிந்துது இப்பதான்,

ஆண் யாரோ, பெண் யாரோ?
தெரிய வேண்டுமா நீ சொல்லு,

யார் மீது, யார் யாரோ?
புரிய வேண்டுமா நீ சொல்லு,

என் காது ரெண்டும் கூச,
வாய் சொன்னதென்ன நீ சொல்,

அந்த நேரம் என்ன பேச,
அறியாது போலே, நீ சொல்,

ஒரு பூவும் அறியாமல்,
தேன் திருடிய ரகசியம்,
நீயே சொல்,

இனி என்ன நான் செய்ய?
இதழோரம் சொல்வாயா?

இடைவேளை நீ தந்து,
இமை தூங்க செல்வாயா?

தந்தன, தந்தன, தை மாசம்,
அது தந்தது தந்தது உன்னதான்,

சந்தன, சந்தன, மல்லி வாசம்,
தேன் சிந்துது சிந்துது இப்பதான்,

ஆகாயம் போதாதே,
உனது புகழையும் தீட்ட,

அன்பே, உன் கண் போதும்,
எனது உயிரையும் பூட்ட,

உன் கண்களோடு நானும்,
முகம் பார்த்து வாழ வேண்டும்,

உன்னை பார்த்து பார்த்து வாழ,
நக கண்ணில் பார்வை வேண்டும்,

உன் கையில் உயிர் வாழ்ந்தேன்,
இது தவமா, வரமா,
புரியவில்லை,

உன்னொடு என் சொந்தம்,
ஈரேழு ஜென்மங்கள்,

உன் வார்தை இது போதும்,
வேண்டாமே சொர்க்கங்கள்,

தந்தன, தந்தன, தை மாசம்,
அது தந்தது தந்தது உன்னதான்,

சந்தன, சந்தன, மல்லி வாசம்,
தேன் சிந்துது சிந்துது இப்பதான்,

என்னது என்னது, இந்த நாணம்?
மெல்ல கொல்லுது கொல்லுது எனத்தான்,

தொட்டது தொட்டது, இப்ப போதும்,
அட மத்தது மத்தது இப்பதான்,

ஆத்தாடி, ஆத்தாடி,
என் நெஞ்சில் காத்தாடி,

ஐயா, உன் முகம் பார்க்க,
என் கண்ணே கண்ணாடி,

மேலும் படிக்க : காட்டுக்குள் கொஞ்சிக் குலவும் சின்ன தல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *