சினிமா

தாரை தப்பட்டை வில்லன் இயக்குனர் இணையும் படம்

விசித்திரன் எனும் விசித்திரமான பெயர்கொண்டு படம் பாலாவின் திரையுலக பயணத்தில் அடுத்த படம் ஆனால் இயக்குனராக அல்ல. என்னது! என ரசிகர்களை ஏமாற்றுகிறார்.

பாலா

இயக்குனர் பாலா அர்ஜுன் ரெட்டி என்னும் தெலுங்கு திரைப்படத்தை தமிழில் த்ருவ் விக்ரம் கொண்டு இயக்கினார். தயாரிப்பாளர்களுக்கு பாலாவால் எடுக்கப்பட்ட அர்ஜுன் ரெட்டியின் தமிழாக்க படத்தின் கிளைமாக்ஸ் நிறைவு அளிக்காததால் பெரிய சர்ச்சை கிளம்பியதாக ஒரு பக்கம் செய்தி கூற மறுபக்கத்தில் பாலா தாமே அந்தப் படத்தில் இருந்து விலகியதாக கூறுகிறார்.

இயக்குனர் பாலா 2018ல் நாச்சியார் படத்திற்குப் பின் எந்த படமும் இயக்கவில்லை. ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை கொடுத்த அர்ஜுன் ரெட்டியின் படத்தின் தமிழாக்கம் அரசல்புரசலாக சர்ச்சையால் நிற்க, பாலா இயக்கிய படத்தில் தயாரிப்பாளர்கள் நிறைவு பெறவில்லையா என்ற ஆச்சரியம் ரசிகர்களிடையே நிலவி வந்தது.

தனித்துவமான கதைகளை இயக்கி வந்த பாலா இரண்டு வருடமாக எந்த படமும் தராமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏக்கத்தை தூண்டுகிறது. தற்போது இந்த செய்தி பாலாவின் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சி அளித்தாலும் பாதி மகிழ்ச்சிதான். விசித்திரன் படத்தில் பாலா தயாரிப்பாளராக மட்டுமே பங்கு வகிக்கிறார்.

ஆர். கே. சுரேஷ்

2016ல் தாரை தப்பட்டை படத்தில் கொடூர வில்லனாக ஆர். கே. சுரேஷ் இயக்குனர் பாலாவால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதனைத்தொடர்ந்து மருது படத்திலும் வில்லனாக கர்ஜித்தார். சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சமுத்திரக்கனியின் நண்பனாக துணை கதாபாத்திரத்தில் நெகிழ்ச்சியாக நடித்திருப்பார். திரையுலகில் நடிகராக வலம் வரும் ஆர். கே. சுரேஷ் முன்னாள் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர். பல துணை கதாபாத்திரங்களிலும் பட்டையைக் கிளப்பிய ஆர். கே. சுரேஷ் விசித்திரம் படத்தில் கதாநாயகனாக களமிறங்குகிறார்.

விசித்திரன்

தாரை தப்பட்டை இயக்குனர் தயாரிக்க கதாநாயகன் வில்லனாக மாறும் இந்த கதை விசித்திரமாக உள்ளது. 2018ல் மலையாள திரையுலகில் வெளியான ஜோசப் என்னும் படத்தின் தமிழ் ரீமேக் விசித்திரன்.

ஆர். கே. சுரேஷ் பூர்ணா மதுஷாலினி நடிக்க பத்மகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பில் பாலாவின்‌ பி ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

மக்களிடையே பெரிய ரசிகர் கூட்டத்தை தன்னகத்தே வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தின் போஸ்டரை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறது என்ற செய்தி அப்போஸ்டரின் வாயிலாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பெப்பர் சால்ட் என்று சொல்லப்படும் கருமையான முடிகளுக்கு நடுவே நரை முடியுடன் காட்சி அளிக்கிறார் ஆர். கே. சுரேஷ்.

விசித்திரன் படத்திற்கு காத்திருக்கும் கூட்டம் மட்டுமல்லாமல் பாலாவின் அடுத்த படத்திற்காக காத்திருக்கும் கூட்டமும் இணைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *