சினிமாசினிமா பாடல்கள்சிலேட்குச்சி வீடியோஸ்

தன்னானே தாமரை பூ பெரியண்ணன் படம்

பெரியண்ணா 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மீனா மற்றும் மானஸா துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அறிமுக இசையமைப்பாளர் பரணி இசையமைத்துள்ளார்

பாடல் வரிகள்:

பச்சோல கீத்துகுள்ள
பதுங்கி நிக்குற பசங்களுக்கு
மறைஞ்சி நிக்குற
பருவம் வந்துருச்சு
மாமனுக்கு செய்யும் சீரும்
செலவும் வந்துருச்சு
உலுலுலுலுலுலுலுலு.

ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க

மேலும் படிக்க ; கழுகு படம் பாடல் வரிகள்

ஊரெல்லாம் கூட்டிகிட்டு
வந்திடுங்க மேளம் கொட்டி

ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்

கொட்டுற பனியில
நானும் உனக்கு கொடையா மாறட்டுமா
உன் வெட்டுற விழியில
மூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா

உனக்கும் எனக்கும் மனசு
இப்ப வைக்க பிரியாச்சு
ஒளிவா மறைவா பேசி சிரிக்க
ஓடை துணையாச்சு

கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு
ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு

உன் இடுப்பு சேலை நழுவ

நான் எடுத்து எடுத்து தழுவ..

ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்

தெனமும் என்ன
தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு.
அத்தி பூத்த
மாலை போல மாமா உன் பேச்சு

கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா

மாமன் தரனும் சீரு
ரெண்டு மாங்கா தட்டு தோடு
நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கேளு

வெடல புள்ள நானும்
ஒரு வெவரம் கேட்க வேணும்

ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க

ஊரெல்லாம் கூட்டிகிட்டு
வருவேனே மேளம் கொட்டி

ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்

மேலும் படிக்க : பிக்பாஸ் 4 தொடர்ந்து ஆரியின் புதிய படம் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *