தனிஒருவன் 2 பட புது வில்லன் இவரா?? அரவிந்த் சாமியே வில்லன பாத்து ஷாக் ஆகிட்டாருனா பாருங்க..
தனி ஒருவன் 2
8 வருடங்களுக்கு முன் நமது அனைவரையும் வியக்க வைத்த திரைப்படம் தனி ஒருவன். முன்னணி பிரபலங்கள் திடீர் என்று எண்ட்ரி கொடுத்து உருவான திரைப்படம் யாரும் எதிர்பார்க்காததை விட பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் காதல், திரில்லர் ,ஆக்சன் என அனைத்தும் கலந்து ஒரு புதுவித அனுபவத்தை மக்களிடத்தில் இப்படம் கொண்டு சேர்த்தது .

மோகன்ராஜ் இயக்கிய தனி ஒருவன் படத்தில் முன்னணி பிரபலங்களான ஜெயம் ரவி, நயன்தாரா , அரவிந்த்சாமி ஆகியோர் நடித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் எட்டு வருடங்களுக்கு முன் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது வெளியாக உள்ளது. தனி ஒருவன் 2 மூவி எப்போது ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.
புதிய வில்லன் யாராக இருக்கும்?
தனி ஒருவன் முதல்பாகத்தில் வில்லனாக நடித்து அனைவர் மனதில் இடம் பிடித்த அரவிந்த்சாமி அப்படத்தில் இறந்துவிட்டார் என்பதுதான் கிளைமேக்ஸ் ஆக இருந்தது. இந்நிலையில் தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக யார் நடிப்பார் அரவிந்த்சாமி அளவிற்க்கு டப் கொடுக்கும் வில்லன் உள்ளாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இறுதியாக தனி ஒருவன் 2 பட புதிய வில்லன் யார் என தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க : ஜெயம் ரவியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பூமி படத்தின் பாடல் வெளியீடு

புதிய வில்லனாக இப்படத்தில் கலக்கப்போவது பகத் பாசில் கண்டிப்பாக புதிய வில்லன் கேரக்டரில் அரவிந்த்சாமிக்கு டஃப் கொடுக்கும் அளவு பகத் பாசில் நன்றாகவே தனது திறமையை வெளிக்காட்டுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். புதிய வில்லனாக களமிறங்கும் பகத் பாசில் மக்களிடத்தில் கண்டிப்பாக ஒரு இடத்தை பிடிப்பார் தனி ஒருவன் 2 பட ரிலீஸ் ஆக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
மேலும் படிக்க : மகேஷ் பாபு பிறந்தநாளையொட்டி தற்போது வெளியான மோஷன் போஸ்டர்