சினிமாசினிமா பாடல்கள்

தாமிரபரணி படம் பாடல் வரிகள் கருப்பான கையாலே..

தாமிரபரணி (Thaamirabharani2007ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினை ஹரி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஷால், பானு, பிரபுநதியா மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சனவரி 27ம் திகதி வெளியிடப்பட்டது.

பாடல் வரிகள்:

கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா

கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா

சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான்

கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா

வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு
உன்னை பாா்த்தேனே அந்த ராவு கால
நேரம் எனக்கு நல்ல நேரமே

தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே
ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் அய்யா

சிவப்பாக ஆஹா
இருப்பாளே ஆமா
சிவப்பாக ஆ ஆ ஆஆ

சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா

ஓஓ உருக்கி வச்ச இரும்பு போல உதடு உனக்கு
அத நெருங்கும் போது கரண்டு போலே ஷாக்கு எனக்கு
ஹே வெட்டும் புலி தீப்பெட்டிப்போல் கண்ணு உனக்கு
நீ பாக்கும்போது பத்திக்கிச்சி மனசு எனக்கு

பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு
உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு
யம்மா ஆத்தா ஹே ஹேய்

கருகரு கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா

ஹா ஹா கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா

ஹே பூக்குதம்மா
நன நன நானனனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *