சினிமா

தளபதியும் ஷாருக்கானும் ஒன்றாக இணையும் சம்பவம்….

இன்றும் இவர் படத்தை பார்த்தால் ஒருபோதும் சலிக்காது. இவர் இயக்கிய படங்கள் ஒன்று கூட நன்றாக இல்லை என்று சொல்லவே முடியாது. இளைஞர்களின் இன்பமான பிரியமான இயக்குனராக இவர் எப்பொழுதும் இருப்பார் இப்பொழுது இளைஞர்களை உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கூறினால் இவர் பெயரைத்தான் அனைவரும் சொல்வார் அந்த அளவிற்கு இவர் படங்களில் தனித்தன்மையும் யதார்த்தமான வாழ்க்கைகள் நடக்கும் சம்பவங்களை அழகாக படங்களில் காட்டும் திறமை கொண்டவர் இவர் யார் இந்த இவர் அவர் வேற யாரும் இல்லங்க நம்ம பேமஸ் டைரக்டர் அட்லி தான்.

இவர் இயக்கிய ராஜா ராணி திரைப்படம் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து காதலுக்கே உரிய படமாக உள்ளது. மேலும் இவரும் விஜய்யும் இணைந்து இயக்கும் திரைப்படங்கள் எப்பொழுதும் பிரம்மாண்டமான வெற்றியை தான் கொடுத்து உள்ளது இவர்கள் இணைந்தாலே அந்த படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் என்று நம்பிக்கை அனைவர் மத்தியிலும் உள்ளது.

இந்நிலையில் டைரக்டர் அட்லி ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நமது தளபதி விஜய் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வழியாக உள்ளது எனவே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க ; வைராலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

ஜவஹர் திரைப்படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் திரைப்படமாக வலம்வரும் என்று இப்பொழுது ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். ஷாருக்கான் அட்லி ஆகியோரது காம்பினேஷன் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் அதில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்றால் அது கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *