பழநியில் தைபூச திருவிழா
பழனியில் தைப்பூச திருவிழா கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. பழனியில் பௌர்ணமி தைப்பூசமாக கொண்டாடப்படுகின்றது. இதனை ஒட்டி தேரோட்டம் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறுகின்றது. 48 நாட்கள் மண்டல பூஜை 11 கலசங்கள் வைத்து இந்த பூஜையானது நடைபெறுகின்றது.
பழனியில் தைப்பூச திருவிழா மிக முக்கிய சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆறுபடை வீடுகளில் முக்கியமான மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதசாமி கோவிலில் கடந்த வாரம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேகம் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் இதன் பொருட்டு உள்ளூர் விடுமுறையும் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகம் முடிந்த பின்பும் பழனியில் கூட்டம் குறையவில்லை. இதற்கு இடையே தைப்பூச திருவிழா தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றது. பழனி நோக்கி மீண்டும் தைப்பூச திருவிழாவிற்காக பக்தர்கள் படை எடுத்த வண்ணம் இருக்கின்றனர். முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.
சுமார் பத்து நாட்களுக்கு வள்ளி தெய்வானை முருகர் தரிசனம் தந்த பல்லாக்கு, வெள்ளி ஆட்டகிடா, வெள்ளி காமதேனும், வெள்ளி யானை, தங்க குதிரை போன்ற வாகனங்களில் முருகன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறும். தெப்பதேர் உற்சவத்துடன் திருவிழாவானது நிறைவு பெறுகின்றது.