தாய்லாந்து ஓபனுக்கு தயராகும் இந்திய அணி!
இந்திய பாட்மின்டன் போட்டிக்காக சிந்து மற்றும் சாய்னா பயிற்சி விளையாட்டுக்கு தயாராகி வருகின்றனர். தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடருக்கு இந்திய பாட்மின்டன் வீரர்கள் செல்ல இருப்பதால் இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியிருக்கின்றனர்.
தாய்லாந்து பாட்மின்டன்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஜனவரி 17 முதல் ஜனவரி 24 ஆம் தேதி வரை தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டிகள் நடைபெற இருக்கின்றது. இதனை அடுத்து வேர்ல்டு டூர் பைனல் ஜனவரி 27ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றன.
பாட்மின்டன் பயிற்சியில் சிந்து சாய்னா
இந்தியாவின் சார்பாக பேட்மிண்டன் வீராங்கனையான சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், கஷ்யப், சமீர் வர்மா, சாய் பிரனீத், சிக்கி ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் விளையாடுகின்றனர்.
இந்திய பாட்மின்டன் வீரர்கள் பயிற்சிக்கு முன்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பின்பு அனைவரும் நலமுடன் இருப்பதால் இவர்களுக்கு ஜிம் பயிற்சியானது வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள்
பாட்மின்டன் வீரர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதால் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வீரர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடுமையான விதிமுறைகள்
பேட்மிட்டன் வீரர்கள் பிசியோதெரபிஸ்ட் வழிகாட்டுதலுடன் தங்களது ஆட்டங்களை தொடர அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தங்களது ஆரோக்கியத்திற்கு தாங்களாகவே பொறுப்பேற்க வேண்டும். போட்டியைத் தவிர மற்ற நேரங்களில் வெளியே நடமாட்டத்தை குறைத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியத்துடன் திட்டமிட்டு போட்டியை வெல்வதே கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருக்கின்றது.