கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவர் தரும் விதிமுறைகள் -2
நாம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் நமக்குத் தேவையான பொருட்களான கைபேசி, அதன் சார்ஜர், புத்தகங்கள், ஹெட்செட் போன்ற பொழுதுபோக்கு பொருட்களும், தலையணை, பெட்ஷீட், துணிமணிகள், பிரஷ், சோப் போன்ற அத்தியாவசிய பொருட்களும் அவரவர் தேவைக்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ளுங்கள்.
மூடத்தனம்
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தங்களுடைய அறிகுறிகளை நன்கு அறிந்து அந்த அந்த அறிகுறிகளை மருத்துவரிடம் கூறி, அவர்கள் தரும் அந்தந்த அறிகுறிகளுக்கு ஏற்றவாறு மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளல் வேண்டும்.
மாத்திரையை உட்கொள்ள உணவு மிகவும் அவசியம் மருத்துவமனையில் கொடுக்கப்படும் உணவை எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்தையும் சாப்பிடுங்கள். கொரோனாவால் ஏற்படும் தொண்டை பிரச்சனையில் உணவு உட்கொள்வது மிகவும் கடினமாகத் தான் இருக்கும் இருப்பினும் எல்லா உணவையும் உட்கொள்வது மிகவும் அவசியம்.
தனிமைப் படுத்தப் பட்டிருக்கும் வார்டில் அனைவருக்கும் கொரோனா தொற்று தானே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அவர்களுடன் கலந்து பேசி உரையாடி மகிழ்வது மிகப்பெரிய மூடத்தனம். குறுக்கு தொற்று என்று சொல்லப்படும்.
ஒரு நோயாளிகளிடம் இருந்து இன்னொரு நோயாளிகளுக்கு நோயின் பரவல் ஏற்படும். தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நாம் இருக்கும் பொழுது நம்மை நாமே அங்கிருக்கும் மற்ற நோயாளிகளிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டால் நாம் விரைவாக குணமடையலாம்.
மருத்துவமனையில் கொடுக்கப்படும் மாஸ்க்கை ஒழுங்கான முறையில் உபயோகிப்பது சிறந்தது அதை விடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு பிறகு பயன்படுத்தலாம் என ஒதுக்கி வைப்பது மூடத்தனம்.
உறவுகளே உங்களின் அக்கறையை நேரில் சென்று கவனிப்பதால் தான் காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. நேரில் சென்றால் உங்களுக்கும் அந்த தொற்று ஏற்படும் என்ற அடிப்படை அறிவை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் நினைத்தால் கைப்பேசி மூலம் வார்த்தையால் அதிரவைத்த தாருகங்கள்.
எதிர்காலம்
மனிதர்களாகிய நாம் நாளையை பற்றிய சிந்தனைகள் இல்லாமல் இருப்பது கடினம். அடுத்த மாதம் பண செலவுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதை பற்றி நினைப்பதை விட கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதே முக்கியமான விஷயம்.
உயிருடன் இருந்தால் தான் அடுத்த மாதத்தைப் பற்றி யோசிக்க முடியும் என்பதை முதலில் மனதில் கொண்டு தொற்றைத் தோற்கடிக்க செயலில் ஈடுபடுங்கள்.