கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவர் தரும் விதிமுறைகள்
கொரோனா! கொரோனா! கொரோனா!
இறைவன் நாமத்தை கூட நாம் இந்தளவுக்கு உச்சரித்து இருக்க மாட்டோம். அந்த அளவிற்கு இந்த நோய் நம் வாழ்க்கையோடு இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நோயை ஒழித்துக் கட்ட முடியுமா?
ஆம்/இல்லை என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்ல முடியவில்லை. அவரவர்க்கு வந்தால்தான் அந்த தலைப்பாடு தெரியும் என்று எண்ணுவது சரியல்ல. மற்றவர்களின் கஷ்டங்களிலிருந்து அவர்களையும் மீட்டு நம்மையும் காத்துக் கொள்வோமாக.
பிரிட்டனில் கொரோனாவுடன் நாடு வாழத் தொடங்கியது. இந்தியாவிற்கு எப்போது அந்த நிலைமை வரும் என்பது தெரியவில்லை. அதற்கு முன்பாக நாம் ஒரு பயிற்சி மருத்துவரின் அனுபவபூர்வமான அறிவுரையை காண்போம்.
டாக்டர் ஆனந்தி பிரபாகரன்
அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவராக பணியாற்றும் இவருக்கு கொரோனா பாதிப்பு வந்துள்ளது. அதனை விரிவாக இவர் மற்றவர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வை தூண்டியுள்ளார்.
ஜூன் 11 இவருக்கு இரவு ஷிப்ட் தரப்பட்டுள்ளது. உடம்பு வலியுடன் லேசாக ஜூரம் துவங்கியது. மருத்துவர் என்பதால் மருத்துவமனையிலிருந்து அதற்குத் தகுந்த மாத்திரையை உண்டுள்ளார். இவருக்கு சாதாரணமாக எந்தவித உடல் உபாதைகளும் ஏற்பட்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 12 தொடர்ச்சியாக உடல் வலியுடன் ஜுரம் உச்சத்தை தொட தொடங்கியது. மியால்கியா என்று சொல்லப்படும் அதிகமான தசை வலி போன்ற அறிகுறிகளைக் கொண்டு இது கொரோனா என்பதை யூகித்த அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு ஸ்வாப் டெஸ்ட் செய்து கொண்டார். இவர்களின் நண்பர்களான 5-6 பேரும் இதனை செய்து கொண்டனர்.
இரண்டு நாள் கழித்து ரிசல்ட் வந்த பொழுது அனைவருக்கும் கொரோனா தொட்டு உறுதி செய்யப்பட்டது. டாக்டர் ஆனந்தி முன்பாகவே யோசித்ததால் இந்த ரிசல்ட் அவர்களை பெரிதாக பாதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அனோஸ்மியா என்று சொல்லப்படும் நுகர் வரையும் திறன் சிறிது நாட்களில் அவர் இழந்துவிட்டார்.
12 நாட்களுக்குப் பிறகு, இரண்டு ஸ்வாப் டெஸ்ட் பாசிட்டிவ்களுக்குப் பிறகு, மூன்றாவது டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்தது. அதன்பிறகு 7 நாட்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார்.
உணவு மற்றும் தேவையான பொருட்கள்
உங்கள் அறிகுறிகளுக்குத் தேவையான மாத்திரை மருந்துகள்,
மூன்று வேளை உணவு,
எலுமிச்சை இஞ்சி புதினா கலந்த ஜூஸ்(அல்லது) மிளகு கலந்த சூப்,
இரண்டு வேளை டீ,பால்,
மாலை சிற்றுண்டிக்கு ஏதேனும் பயறுவகைகள்,
மிளகு,மஞ்சள் தூள் கலந்த பால்,
தினம் ஒரு முட்டை,
தினம் ஒரு பழம் (பெரும்பாலும் ஆரஞ்சு),
வெந்நீர்,
கபசுரக் குடிநீர்,
முகத்துக்கு மாஸ்க்
என எல்லா மருத்துவமனைகளிலும் அவர்களின் நேரக் கணக்குப்படி உங்களின் இடத்திற்கே வந்து தருவார்கள்.
இதில் நம்முடைய வேலை ‘ஐயோ. சாப்பிட முடியலையே’ என்று ஒதுக்கி வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுவது தான்.
இது இல்லாமல் ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை அன்னாசிப்பழம் ஆகியவற்றை டாக்டர் ஆனந்தி அவர்கள் தாமாக வாங்கிக்கொண்டு வரச் சொல்லி சாப்பிட்டுள்ளார்.