ஆன்மிகம் அறிவோம்.. ஸ்தல வரலாறு..!!
மதுரையில் உள்ள ஸ்தலங்களில் மிகவும் பிரபலமானது அழகர் கோவில். நீங்க எப்ப மதுரை போனாலும் இதெல்லாம் மிஸ் பண்ணாதீங்க. குடும்பத்துடன் சித்திரை திருவிழா போய் பாருங்க அசந்து போவீங்க. மிஸ் பண்ணோம்னு பின்னாடி வறுத்த படாதீங்க. இந்தக் கோவில் தளங்களின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம். ஒருமுறை பூமியில் உள்ள புனித தலங்களை எல்லாம் தரிசனம் செய்து வந்து கொண்டிருந்த எமதர்ம ராஜா அழகும், பசுமையும் நிரம்பிய அழகர் மலையை சேர்ந்தார். அங்கு பல வருடங்கள் தவம் செய்து இறுதியில் பகவான் விஷ்ணுவையும் தரிசனம் பெற்றார்.
எமதர்மன் அவரிடம் நிரந்தரமாகத் தங்கி பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளுக்கு இணங்கிய பகவான் மலையிலிருந்து பெருகி வரும் புனித நதியான கங்கையின் கரையில் ஆலயம் ஒன்று அமைக்க அருள்பாலித்தார். மரங்கள் நிறைந்த நூபுர கங்கை நதிக்கரையில் அரச மரம் ஒன்றின் அடியில் பகவானுக்கு ஆலயம் ஒன்று அமைத்தார்.
பகவான் விஷ்ணுவை அங்கு எழுந்தருளிருக்க எமதர்மன் வேண்டவே பகவான் விஷ்ணுவும், எமதர்மனின் விருப்பப்படி, பூதேவி, ஸ்ரீதேவி, சமேதரராய் அந்த கோயிலில் எழுந்தருளி காட்சி அளிக்க, அன்றிலிருந்து பகவானும் அங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சிலம்பாறு தோன்றிய வரலாறு : பலிச்சக்ரவர்த்தி என்ற பிரகலாதனின் பேரனான இவர். இந்திரன் முதலான அனைத்து தேவர்களையும் மூவுலகங்களையும் வெற்றி பெற்றவர். தோல்வியுற்ற தேவர்கள் பகவான் விஷ்ணுவை அடைக்கலம் அடைந்தனர். தேவர்கள் இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்றுத் தர கசியப முனிவருக்கும், அதிதிக்கும் புத்திரனாக சிறிய அந்தணராக பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுக்கலாயினார்.
பின்னர் பலிச்சக்கரவர்த்தி யாகசாலைக்கு சென்ற வாமனர் அவரிடம் தன்னுடைய காலடிக்கு மூன்றடி நிலம் கேட்டார். அதனை ஏற்றுக்கொண்ட அவரும் தன் வார்த்தைகளை, நீரைத் தாரை வார்த்து உறுதி செய்தார். அக்கணமே வாமனர் பிரம்மாண்டமான ரூபமெடுத்து தன்னுடைய இருகால் அடிகளால் மூவுலகங்களையும் அளந்த பின்னர், மூன்றாவது அடிக்கு இடம் கேட்க தன் தலையை பதின்மூன்றாவது அடித்தளமாக காட்ட. மகாபலியின் தலையில் பாதம் பதித்து அவரை பாதாள லோகத்திற்கு அழுத்திவிட்டார்.
இந்த திரிவிக்கிரம அவதாரத்தின் போது பகவான் விஸ்வரூபமெடுத்து மூவுலகங்களையும் அடக்க தன் பாதங்களை உயர்த்தியபோது பகவானின் முதல் படைப்பான பிரம்மா, தன்னுடைய தந்தையாகிய பகவானின் பாதங்களைத் தன் கமண்டல நீரினால், பூஜை செய்தவாறு, பிரம்மா பூஜை செய்த நீர் பகவானின் பாதங்களிருந்து வடிந்து பகவான் பாதங்களில் அணிந்திருந்த சிலம்புகளில் பட்டுத்தெரித்தன.
அதில் சில துளிகள் அழகர் மலைமீதுள்ள நூபுர கங்கை நதியா பெருகி ஓடியது. இந்த சிலம்பத்தில் நவரத்தின ஒளிகளும், பிரதிபலிக்கும் தாயார் லட்சுமி போன்று இந்த சிலம்பாறு பகவானின் பாதங்களை வருடிக்கொண்டு செல்கிறது.
சிலம்பு ஆற்றின் மகிமை : முனிவராலும், ரிஷிகளாலும் வழிபடப்பட்டு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்ததாலே இந்நதி இஷ்டசித்தி பெயர் பெற்றது. மரீசி முனிவர் சாயுஜ்ய முக்தி பெற்றார். தர்மதேவன் சாலோக்ய முக்தி பெற்றார். பிரம்மா சாமீப்ய முக்தி பெற்றார். சுதபமுனிவர் சாரூப்ய முக்தி பெற்றார்.
இந்நதியில் 12 நாட்கள் நீராடுவதனால் சாயுஜ்ய முக்தி கிடைக்கும். ஒரு தடவை நீராட பாவங்கள் நீங்கும். ஐப்பசி மாதம் சுக்ல பக்ஷ துவாதசி அன்று நீராட சகல பாவங்ககளை போக்கும். செவ்வாய்க்கிழமைகளில் நீராடுபவர்கள் விரும்பியது பெறுவர். இந்த நதி தரிசிப்பவர்கள், துதிப்பவர்கள் மோட்சம் பெறுவர்.