செய்திகள்தமிழகம்தேசியம்மருத்துவம்வாழ்க்கை முறை

இ- சஞ்சீவினி சேவையை பயன்படுத்தும் இந்தியா!

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி இந்தியாவில் டெலி மெடிசன் எனப்படும் இ- சஞ்சீவினி மருந்துகள் மிகவும் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இ-சஞ்சீவினி தளம் மூலமாக ரூபாய் 5 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ ஆலோசனைகளை நாடு முழுவதும் வழங்கியிருக்கின்றது.

  • பெருகும் இ-சஞ்சீவினி மருத்துவ சேவைகள் மத்திய சுகாதர துறை அமைச்சகம் தகவல்.
  • கடந்த 17 நாட்களில் சுமார் 1 லட்சம் பேர் இ- சஞ்சீவினி தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனையை[ப் பயன்படுத்தியுள்ளனர்.
  • இ-சஞ்ச்சீவினி சேவையை நாட்டிலே அதிகம் பயன்படுத்திய மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து முக்கியத்துவம் தருகின்றது.

இ-சஞ்சீவினி மருத்துவ சேவை

இந்தியாவில் தொடர்ந்து தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் இ-சஞ்சீவினி மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இ- சஞ்சீவினி மருத்துவ ஆலோசனைக்கு நாடு முழுவதும் 216 ஆன்லைன் சேவைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் நாட்டில் இ-சஞ்சீவினி சேவை

தமிழ்நாட்டில் 1, 69, 977 மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று உத்தரபிரதேசத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 992 ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவ சேவைகளை இ- சஞ்சீவினி முறைப்படி மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா முழுவதும் இ-சஞ்சீவினி

இந்த மருத்துவ சேவையை மொபைல் மூலமாக 25 மாநிலங்கள் பயன்படுத்தியிருக்கின்ற. சுமார் 5 லட்சம் பேருக்கு நாடு முழுவதும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றது.

17 நாட்களில் 1 லட்சம் மருத்துவ ஆலோசனைகள்

செப்டம்பர் இறுதிக்குப்பின் இப்பொழுது வரை 17 நாட்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இ-சஞ்சீவினிக்கு தொடர்புகொண்டு ஆலோசனையை மக்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாடும் முழுவது இ- சஞ்சீவினி விழிப்புணர்வு

நாடு முழுவதும் இ- சஞ்சீவினி மூலமாக மக்கள் மிகுந்த சேவைகளை பெறுவார்கள் என நம்பப்படுகின்றது. மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகரித்தால் மேலும் பலர் இந்த சேவையைக் கொண்டு பயன்பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *